’சிம்புவுடன் படம் பண்ணுவது தனுஷுக்கு பிரச்சனையா?’ – வெற்றிமாறன் நெத்தியடி பதில்!

Published On:

| By christopher

is dhanush angry on vetrimaran for do a film with simbu

தமிழ்சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், அசூரன், வடச்சென்னை மற்றும் விடுதலை 1 & 2 என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குநராக வெற்றிமாறன் வலம் வருகிறார். is dhanush angry on vetrimaran for do a film with simbu

ஆனால் நடிகர் சூர்யாவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் வாடிவாசல் கைவிடப்பட்டது, சிம்புவை வைத்து படம் எடுப்பதால் தனுஷுடன் பிரச்சனை என வெற்றிமாறன் குறித்து ஏகப்பட்ட செய்திகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக கிராஸ் ரூட் பில்ம் கம்பெனியன் யூடியூப் சேனலில் வெற்றிமாறன் முதன்முறையாக விளக்கம் அளித்து இன்று (ஜூன் 30) ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். is dhanush angry on vetrimaran for do a film with simbu

அடுத்தப்படம் என்ன?

அதில், “என்னுடைய அடுத்த படத்தில் சிம்பு நடிக்க உள்ளார். தாணு அப்படத்தை தயாரிக்கிறார்.

நான் வாடிவாசல் படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதுமட்டுமல்லாமல் தொழில்நுட்ப ரீதியாகவும், நடிகர்கள், விலங்குகளின் பாதுகாப்புக் கருதியும் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாது என்பதால்தான், அடுத்த படம் குறித்து முடிவு செய்துவிட்டோம்.

அந்த நேரத்தில் தாணு சார், ‘நீங்க சிம்புவுடன் படம் பண்ணுறீங்களா?’ என்று கேட்டார். உடனே அவருடன் நடந்த சந்திப்பில், அடுத்தப் படம் அவருடன் தான் என முடிவானது.

தனுஷுடன் என்ன பிரச்சனை?

சிம்புவை இயக்கும் படம் வட சென்னை 2- ஆ இருக்குமா என கேள்வி எழுப்பப்படுகிறது. இது நிச்சயம் வட சென்னை 2 கிடையாது. அது அன்புவின் எழுச்சிதான்.. தனுஷ் நடிப்பது தான் வட சென்னை 2. அதே நேரத்தில் இது வட சென்னை உலகத்தில் நடைபெறும் கதையாக இருக்கும்.

தனுஷ் தான் வட சென்னை படத்தின் தயாரிப்பாளர். படத்தின் திரைக்கதை, கதாப்பாத்திரம், அதன் பாகங்கள் என அனைத்திற்கும் ஐபி உரிமையாளர் தனுஷ் தான். தனக்கு உரிமையான விசயத்திற்கு பணம் வேண்டும் என தனுஷ் கேட்பது சட்டப்பூர்வமாக சரியானது. அதை வந்து யாரும் கேள்விக் கேட்கவோ, தவறாக விமர்சிக்கவோ கூடாது.

உண்மை என்னவென்றால், நான் தாணு சார், சிம்பு மூன்று பேரும் சந்தித்து பேசிய அடுத்த நாள் காலையில் தனுஷுக்கு போனில் பேசினேன். அப்போது அவரிடம், “சிம்பு வைத்து என்னால் ஸ்டாண்ட் அலோன் படமும் பண்ண முடியும்… வடசென்னை யூனிவர்சில் நிகழும் படமாகவும் பண்ண முடியும். ஆனால் முடிவு உங்கள் கையில் உள்ளது. நீங்கள் தான் படத்தின் உரிமையாளர் என்றேன்.

அதற்கு அவர், “சார் அப்படி எதுவும் நினைக்காதீர்கள். உங்களுக்கு கிரியேட்டிவ்வாக எது சரி எனப்படுகிறதோ அதை செய்யுங்கள் . அதில் எந்த பிரச்சனையும் இல்ல. நான் என்.ஓ.சி கொடுக்கிறேன். எனக்கு எந்த பணமும் கொடுக்க வேண்டாம்” என்றார்.

ஆனால் என்.ஓ.சி கொடுக்க தனுஷ் என்னிடம் படம் கேட்டதாக யூடியூபில் சில தவறாக செய்தி வெளியிட்டிருந்தனர். அது என்னை மேலும் காயப்படுத்தியது. அதனால் தான் இந்த விளக்கம்” என்றார்.

தனுஷ் – சிம்பு ரியாக்சன் என்ன?

மேலும் அவர், நான் சிம்புவை வைத்து படம் பண்ணுகிறேன் என்றதும், ”சார் இது கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும். அவருக்கும் உங்களுடன் பணிபுரிவது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்றார்.

நான்கு நாட்களுக்கு முன்பு சிம்பு என்னை சந்தித்தபோது, ”சார் நீங்கள் என்னுடன் படம் பண்ணுவது குறித்து ஊடகங்களில் சில தவறான செய்திகளை கண்டேன். தனுஷுக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பு என்னால் கெட்டுப் போய் விடக்கூடாது. உங்களுக்கும், தனுஷுக்கும் உள்ள ஒப்பந்தத்தின் படி எது சரியோ அதை செய்யுங்கள்” என்றார். அதன்மூலம் எனக்கு தனுஷ் – சிம்பு இருவருமே ஒருவரையொருவர் எப்படி மதிக்கின்றனர் என்பது தெரிந்தது.

எனக்கும் தனுஷுக்கும் உள்ள பழக்கம் பொல்லாதவன் படத்தில் இருந்து இல்லை பாலு மகேந்திரா இயக்கத்தில் அது “ஒரு கனாக்காலம்” படத்தில் உதவி இயக்குனராக நான் பணியாற்றும் போதிலிருந்து எங்களுக்குள் நல்ல ஒரு புரிதல் இருக்கிறது. எனவே சிம்புவுடம் படம் தொடங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை” என்றார்.


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share