சென்னையை தாக்குமா டிட்வா புயல்?

Published On:

| By Mathi

Ditwah KSSR

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வரும் டிட்வா (Ditwah டித்வா) புயல் சென்னையை தாக்குமா? என்பது இன்னமும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது:

ADVERTISEMENT
  • டிட்வா புயலால் பெய்த மழைக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை; 16 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
  • புயல் பாதிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
  • டிட்வா புயல் பாதிப்பு குறித்து திங்கள்கிழமைக்கு பின்னர் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
  • டிட்வா புயல் சென்னையைத் தாக்குமா? என்பது குறித்து தெளிவாக கூறப்படவில்லை; சென்னையை ஒட்டிச் செல்லக் கூடும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வெளி மாநிலங்களில் இருந்து முன்னெச்சரிக்கையாக 10 பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
  • புயலால் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்; கடலோரப் பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம்
  • புயல் முன்னெச்சரிக்கையாக 1 கோடி பேருக்கு SMS தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாடு மையத்தில் டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொளி வாயிலாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share