இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் முடிவடைந்து இன்றுடன் ஒரு வாரம் முடிந்துள்ளது. iran ready to framed israel terrorism after 935 died
இரு நாடுகளுக்கும் இடையில் நடந்த 12 நாள் யுத்தத்தில் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இதுவரை 935 ஈரானியர் உயிரிழந்ததாக அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதில் 38 குழந்தைகளும், 132 பெண்களும் உள்ளனர் அடங்குவர் என ஈரான் நாட்டின் நீதிமன்றத்தின் செய்தி தொடர்பாளர் அஸ்கர் ஜஹாங்கீர் திங்களன்று அந்நாட்டின் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று அமலான போர் நிறுத்தத்திற்கு முன் ஈரான் சுகாதார அமைச்சகம் அறிவித்த 610 பேர் உயிரிழந்ததாகக் கூறிய எண்ணிக்கையை விட மிக அதிகம்.

மேலும் ஈரான் தலைநகரம் தெஹ்ரானில் உள்ள எவின் சிறைச்சாலையில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 71-ல் இருந்து 79 ஆக திருத்தப்பட்டுள்ளது எனவும் ஜஹாங்கீர் கூறினார்.
கடந்த ஜூன் 13-ம் தேதி, இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலால் ஈரானின் அணு ஆயுத செறிவூட்டல் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் முன்னணி இராணுவத் தளபதிகள் மற்றும் பொதுமக்கள் பலியாகினர்.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் 1980-களில் ஈராக்-ஈரான் போருக்குப் பிறகு ஈரானுக்கு ஏற்பட்ட மிகக் கடுமையான தாக்குதலாகும்.
மேலும் இஸ்ரேலின் இந்த தாக்குதல் தொடர்பாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் எஸ்மாயில் பாகாயி கூறியதாவது, “இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை பல போர் குற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்த குற்றங்களை நிரூபிக்கும் ஆதாரங்களை சர்வதேச அமைப்புகளுக்கு ஈரான் வழங்கும் என்றும், இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அந்த அமைப்புகள் கடமைப்பட்டிருக்கின்றன” என்றும் அவர் கூறினார்.
மேலும் இஸ்ரேலின் சயோனிஸ்ட் ஆட்சி எந்த காரணமும் இல்லாமல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. எனவே, இதை இராணுவத்தையும் பொதுமக்களையும் தனியாகப் பார்க்க முடியாது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.