ஈரானின் அதி உயர் தலைவர் கமெனி கொல்லப்பட்டார்.. உறுதி செய்த ஈரான்

Published On:

| By Mathi

Khameni

ஈரானின் அதி உயர் தலைவர் அலி கமெனி கொல்லப்பட்டுவிட்டதாக ஈரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரானும் மத்திய கிழக்கில் அமெரிக்கா படைகள் மீது தாக்குதல் நடத்துகின்றன.

ADVERTISEMENT

ஈரான் மீதான தாக்குதலில் 700-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஈரானின் அதி உயர் தலைவர் கமெனி கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு அறிவித்திருந்தனர். இதனை ஈரான் முதலில் மறுத்திருந்தது.

தற்போது கமெனியும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டது உண்மைதான் என ஈரான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share