19-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ந் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் பட்டியலை அனைத்து அணிகளும் ஐபிஎல் நிர்வாகத்திடம் ஒப்படைத்தன.
அதே நேரத்தில் ஐபிஎல் அணிகள் வீரர்களை பரிமாற்றமும் செய்துள்ளன.
ஐபிஎல் தொடரில் 5 முறை வாகை சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள் பட்டியலை அளித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்கும் வீரர்கள்:
- எம்.எஸ். தோனி
- ருதுராஜ் கெய்க்வாட்
- ஷிவம் துபே
- ஆயுஷ் மத்ரே
- டெவால்ட் பிரெவிஸ்
- உர்வில் படேல்
- ஜேமி ஓவர்டன்
- ராமகிருஷ்ணா கோஷ்
- நூர் அகமது
- கலீல் அகமது
- அன்ஷுல் கம்போஜ்
- குர்ஜப்னீத் சிங்
- ஷ்ரேயஸ் கோபால்
- முகேஷ் சவுத்ரி
- நாதன் எல்லிஸ்
சென்னை சூப்பர் கிங்ஸில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள்
- ராகுல் திரிபாதி
- வான்ஷ் பேடி
- ஆண்ட்ரே சித்தார்த்
- ரச்சின் ரவீந்திரா
- டெவோன் கான்வே
- தீபக் ஹூடா
- விஜய் சங்கர்
- ஷேக் ரஷீத்
- கமலேஷ் நாகர்கோட்டி
- மதீஷா பத்திரனா
இந்த சீசனின் மிக முக்கிய திருப்பங்களில் ஒன்று, சென்னை அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளனர். இருப்பினும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரரும், சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.
