ஆன்லைனில் ஆர்டர் செய்தால் சில நிமிடங்களிலேயே பொருட்கள் வீட்டு வாசலில் வந்துநிற்கும் ‘குவிக் காமர்ஸ்’ (Quick Commerce) யுகத்தில் நாம் இருக்கிறோம். மளிகை சாமான்கள் மட்டுமல்ல, தற்போது லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐபோன்களையும் பிளிங்கிட் (Blinkit), ஜெப்டோ (Zepto) போன்ற நிறுவனங்கள் 10 நிமிடங்களில் டெலிவரி செய்து வருகின்றன.
அந்த வகையில், ஆசை ஆசையாகப் புதிய ஐபோன் 17 (iPhone 17) ஆர்டர் செய்த இளம்பெண் ஒருவருக்கு, அந்த மகிழ்ச்சி ஒரு நொடி கூட நீடிக்காத சோகம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடந்தது என்ன? ஆஷி சிங்லா (Ashi Singla) என்ற இளம்பெண், தனது பழைய போனைத் தொலைத்துவிட்டதால், புதிதாக வெளியான ‘ஐபோன் 17’ மாடலை பிளிங்கிட் செயலி மூலம் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த சிறிது நேரத்திலேயே போன் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட, தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் அந்தப் புதிய போனை ‘அன்பாக்ஸிங்’ (Unboxing) செய்துள்ளார்.
அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். ஆனால், பாக்ஸை திறந்த வேகத்தில், வழுவழுப்பான அந்தப் புதிய ஐபோன் கை நழுவி, ‘தொப்பென’ தரையில் விழுந்தது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
“டெலிவரி பாஸ்ட்… விழுந்தது அதைவிட பாஸ்ட்!”
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஆஷி, தனது வேதனையை நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். “பிளிங்கிட் டெலிவரி வேகமாக இருந்தது… ஆனால் போன் கீழே விழுந்தது அதைவிட வேகமாக இருந்தது” (Blinkit delivery was fast… the fall was faster) என்று அவர் பதிவிட்டுள்ள கேப்ஷன் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இணையவாசிகளின் ரியாக்ஷன்: இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “ஐயோ! அந்தச் சத்தம் கேட்கும்போதே நெஞ்சு வலிக்கிறது” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
- “புது போன் வாங்கினால், அதைத் தரையில் அமர்ந்துதான் திறக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி,” என்று சிலர் அறிவுரை கூறுகின்றனர்.
- “கவலைப்படாதீங்க, கன்டென்ட் (Content) கிடைத்துவிட்டது, போனை சர்வீஸ் செய்துவிடலாம்,” என்று சிலர் ஆறுதல் கூறுகின்றனர்.
- இன்னும் சிலர், ஆப்பிள் நிறுவனத்தின் பாக்ஸ் டிசைன் மிகவும் வழுக்கும் தன்மையுடன் இருப்பதே இதற்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
லட்ச ரூபாய் மதிப்புள்ள போனை வாங்கும்போது இருக்கும் அவசரம், அதைப் பிரிக்கும்போது இல்லாமல் போனதே இந்த விபரீதற்குக் காரணம். இந்த வீடியோ தற்போது மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.
