விமான விபத்துகளில் உயிரிழந்த இந்திய அரசியல் பிரபலங்கள்

Published On:

| By Pandeeswari Gurusamy

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை மும்பையிலிருந்து தனி விமானம் மூலம் தனது சொந்த தொகுதியான பாராமதிக்குப் புறப்பட்டார். விமானம் பாராமதியில் தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் பலியாகியுள்ளனர்.

முந்தைய விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகளில் உயிரிழந்த அரசியல் பிரபலங்கள்:

ADVERTISEMENT
  • 1973-ம் ஆண்டு மே 31-ந் தேதி, டெல்லியில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் முன்னாள் எம்.பி. மோகன் குமாரமங்கலம் உயிரிழந்தார்.
  • 1980-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி டெல்லியில் விமான சாகசத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மகனும் ராஜீவ் காந்தியின் சகோதரருமான சஞ்சய் காந்தி காலமானார்.
  • 1997ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மலைபகுதியில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் என்.வி.என். சோமு உயிரிழந்தார்.
  • 2001-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த தனியார் விமான விபத்தில் முன்னாள் ரயில்வே அமைச்சர் மாதவராவ் சிந்தியா காலமானார்.
  • 2002-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி ஆந்திர பிரதேசம் கிருஷ்ணா மாவட்டத்தில் பெல் ஹெலிகாப்டர் விபத்தில் நாடாளுமன்றத்தின் 12-ஆவது சபாநாயகராக இருந்த ஜி.எம்.சி. பாலயோகி காலமானார்.
  • 2005-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஹரியானா முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் ஓ.பி.ஜிந்தால் மற்றும் முன்னாள் வேளாண் துறை அமைச்சர் சுரேந்தர் சிங் ஆகியோர் உயிரிழந்தனர்.
  • 2009-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி நல்லமலா வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஓய்.எஸ். ராஜசேகர் ரெட்டி காலமானார்.
  • 2011-ம் ஆண்டு ஏப்ரல் 30-ல் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முதல்வர் டோர்ஜி கண்டு காலமானார்.
  • 2025-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.
  • இந்நிலையில் இன்று (26 ஜனவரி 2026) மகாராஷ்டிர மாநிலம் பாராமதி விமான நிலையத்தில் விமானம் வெடித்துச் சிதறியதில் துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் பலியாகியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share