ADVERTISEMENT

ராணுவத்தில் சேரனுமா? சென்னை இளைஞர்களுக்கு மெகா ஜான்ஸ்! அக்னிவீர் ஆள்சேர்ப்பு 2026 அறிவிப்பு… 10-வது படிச்சிருந்தா போதும்! மிஸ் பண்ணிடாதீங்க பாஸ்!

Published On:

| By Santhosh Raj Saravanan

indian army agniveer chennai recruitment rally 2026 notification details

“என்னப்பா… ‘கைல 10-வது, 12-வது மார்க் ஷீட் இருக்கு, ஆனா ஒரு கெத்தான வேலை கிடைக்கலையே’ன்னு பீல் பண்றீங்களா? ‘காக்கிச் சட்டை மேல ஒரு தனி பாசம், நாட்டுக்குச் சேவை செய்யணும்னு வெறி இருக்கு, ஆனா அதுக்கு சரியான ரூட் தெரியலையே’ன்னு நினைக்கிற தம்பிங்களா? உங்க கவலையை ஓரமா வைங்க பாஸ்! இதோ இந்திய ராணுவம் சென்னை இளைஞர்களுக்காக ஒரு ‘கோல்டன் டிக்கெட்’ கொண்டு வந்திருக்கு. அக்னிவீர் (Agniveer) ஆள்சேர்ப்பு முகாம் 2026… இது உங்க கனவை நனவாக்கப் போற ஜாக்பாட் வாய்ப்பு!”

இந்திய ராணுவம் (Indian Army), 2026-27 ஆம் ஆண்டுக்கான அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம் குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை மண்டல தலைமையகம் (HQ Rtg Zone, Chennai) வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் கீழ், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம். “ஏப்ரல் 1-ஆம் தேதி தான் அப்ளை பண்ண கடைசி நாள். அப்புறம் என்ன பாஸ், இன்னைக்கே உங்க வேலையை ஆரம்பிங்க!”

ADVERTISEMENT

யாருக்கெல்லாம் இந்த ஜாக்பாட்? (Eligibility Check)

இந்த முகாமில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம்:

  • வயது வரம்பு: (01.07.2026 தேதியின்படி) 17.5 வயது முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 01 ஜூலை 2005 முதல் 01 ஜூலை 2009-க்குள் பிறந்தவர்கள் மட்டுமே ‘Apply’ பண்ண முடியும்.
  • கல்வித்தகுதி: * அக்னிவீர் (GD): 10-ஆம் வகுப்பு (SSLC) 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சி. (ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 33% இருக்கணும் பாஸ்!).
    • அக்னிவீர் (Technical): 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடங்களுடன் தேர்ச்சி.
    • அக்னிவீர் (Clerk / Store Keeper): 12-ஆம் வகுப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
    • அக்னிவீர் (Tradesman): 8-வது அல்லது 10-வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

முக்கியமான தேதிகள் (Mark the Dates!):

கடைசி நேரத்துல சர்வர் பிஸியாகி உங்க கனவுல மண்ணை அள்ளிப் போட்டுடப்போகுது, அதனால இந்தத் தேதிகளை நோட் பண்ணிக்கோங்க:

ADVERTISEMENT
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: பிப்ரவரி 13, 2026.
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 01, 2026.
  • ஆன்லைன் தேர்வு (CEE): ஜூன் 01 முதல் ஜூன் 15, 2026 வரை (தற்காலிகமாக).
  • விண்ணப்பக் கட்டணம்: ரூ. 250/- (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்).

தேர்வு முறை எப்படி இருக்கும்?

இதுல ரெண்டு கட்டமா தேர்வு நடக்கும் பாஸ்:

  1. கட்டம் 1 (Phase-I): ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு (Online CEE). இதுல பாஸ் பண்ணா தான் அடுத்த லெவல்.
  2. கட்டம் 2 (Phase-II): ஆள்சேர்ப்பு முகாம் (Recruitment Rally). இதுல உடற்தகுதித் தேர்வு (1.6 கி.மீ ஓட்டம், புல்-அப்ஸ்), ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை நடக்கும்.

இதை கவனிங்க:

  1. பயிற்சிதான் கிங்: ஆன்லைன் எக்ஸாம்ல பாஸ் பண்ணுறது எவ்ளோ முக்கியமோ, அதே அளவு பிசிகல் டெஸ்ட்டுக்கு ரெடியாகுறதும் முக்கியம். அதனால இன்னைல இருந்தே காலையில ஓட ஆரம்பிங்க பாஸ். ‘ரிசல்ட்’ உங்க பக்கம் வர இதுதான் ஷார்ட்கட்!
  2. ஓட்டுநர் உரிமம் ஜாக்பாட்: உங்ககிட்ட எல்.எம்.வி (LMV) டிரைவிங் லைசென்ஸ் இருந்தா, அக்னிவீர் (GD) டிரைவர் பதவிக்கு உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். மிஸ் பண்ணிடாதீங்க!
  3. ஆதார் கார்டு லிங்க்: உங்க ஆதார் கார்டுல மொபைல் நம்பர் லிங்க் ஆகியிருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. அப்ளை பண்ணும்போது அது ரொம்ப முக்கியம்.

எப்படி விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள தகுதியான இளைஞர்கள் இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://joinindianarmy.nic.in/ என்ற பக்கத்திற்குச் சென்று ஏப்ரல் 1-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

முடிவாக…

நாட்டுக்காகச் சேவை செய்றதுங்கிறது ஒரு பெரிய கௌரவம். 4 வருஷம் முடிச்சு வெளிய வரும்போது 25% பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பும், மத்தவங்களுக்கு ‘சேவா நிதி’ மூலமா ஒரு பெரிய தொகையும் கிடைக்கும். உங்க ராணுவக் கனவு நிஜமாக வாழ்த்துக்கள்!

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share