இந்தியா – பாகிஸ்தான் யுத்தம்: 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன – டிரம்ப் புது தகவல்!

Published On:

| By Mathi

Donal Trump

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலின்போது சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்களின் எண்ணிக்கை குறித்து மீண்டும் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இந்த மோதலில் தான்தான் சமாதானத் தூதுவராகச் செயல்பட்டு, அணு ஆயுத வல்லமை கொண்ட இரு நாடுகளுக்கிடையே ஏற்படவிருந்த பெரும் போரைத் தடுத்ததாக அவர் மீண்டும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மியாமி நகரில் நடைபெற்ற அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், “நான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது போர் தொடங்கப்போகிறது என்று செய்தித்தாள்களில் படித்தேன். ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, எட்டாவது விமானம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது… அடிப்படையில் எட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன” என்றார்.

ADVERTISEMENT

டிரம்ப் இதற்கு முன்பு ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறினார். பின்னர், இந்த எண்ணிக்கை ஏழாக அதிகரித்தது. டோக்கியோவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், “இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பாருங்கள், அவை மோதிக்கொண்டிருந்தன. ஏழு புதிய, அழகான விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு அவ்வப்போது எண்ணிக்கையை மாற்றி மாற்றி டிரம்ப் சொல்வது சர்ச்சையாகி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share