அமெரிக்க வளைகுடா கடற்கரையிலிருந்து ஆண்டுக்கு சுமார் 2.2 மில்லியன் டன் திரவ எரிவாயு (எல்பிஜி) இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை வெற்றிகரமாக இந்தியா இறுதி செய்துள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.
இந்திய சந்தைக்கான முதலாவது அமெரிக்க திரவ எரிவாயு ஒப்பந்தம் இது. இந்தியாவின் ஓராண்டு திரவ எரிவாயு இறக்குமதியில் இது சுமார் 10%.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சி என்று குறிப்பிட்ட அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, உலகின் மிகப் பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் எல்பிஜி சந்தைகளில் ஒன்று இப்போது அமெரிக்காவிற்குத் திறக்கப்பட்டுள்ளது என்றார்.
