டெல்லியில் ‘இந்தியா கூட்டணி’ ஆலோசனை.. ராகுல், கார்கே, டிஆர் பாலு, திருச்சி சிவா பங்கேற்பு

Published On:

| By Mathi

India Bloc Meeting

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் “இந்தியா” கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று ஜனவரி 28-ந் தேதி காலை நடைபெற்றது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஏப்ரல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. இன்று நாடாளுமன்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.

ADVERTISEMENT

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் “இந்தியா” கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், திமுகவின் டிஆர் பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறாமல் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா கூட்டணி கூட்டத்தில் ராகுல், கார்கே உள்ளிட்டோருடன் திமுகவின் டிஆர் பாலு, திருச்சி சிவா பங்கேற்றுள்ளனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share