ADVERTISEMENT

ஏஐ சமிட்டில் ‘ரோபோ’ வில்லங்கம்! சீன நாயைக் காட்டி ‘கெத்து’ கொடுத்த பல்கலைக்கழகம்… பாதியிலேயே ‘கட்’ பண்ணிய அரசு! என்ன நடந்தது?

Published On:

| By Santhosh Raj Saravanan

india-ai-impact-summit-2026-galgotias-university-robodog-controversy-explained

“என்னப்பா… ‘இந்தியாவே உலகத்துக்கு ஏஐ (AI) சொல்லித் தரப்போகுது’னு ஒரு பக்கம் பெருமையா மாநாடு நடத்திட்டு இருந்தா, இன்னொரு பக்கம் ‘சைனா நாயை’ கொண்டு வந்து ‘நாங்கதான் செஞ்சோம்’னு சொல்லி இந்தியா மானத்தையே கப்பலேத்திட்டாங்களே… ‘ஐயோ பாவம்’னு சொல்ல வைக்கிற அளவுக்கு ஒரு பல்கலைக்கழகம் பண்ண காரியம் இப்போ டெல்லி பாரத் மண்டபத்தையே அதிர வச்சிருக்கு பாஸ்!”

டெல்லியில் இன்று (பிப்ரவரி 19, 2026) 4-வது நாளாக ‘India AI Impact Summit 2026’ மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. இன்று பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டின் முக்கிய அமர்வில் உரையாற்றியதுடன், ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன், பில் கேட்ஸ் மற்றும் முகேஷ் அம்பானி என உலகத்தரம் வாய்ந்த ஜாம்பவான்கள் ஒரே மேடையில் பங்கேற்றனர். ஆனால், மாநாட்டின் ‘ஹீரோ’களாக இருக்க வேண்டிய இவர்களை விட, ஒரு ‘ரோபோ நாய்’ விவகாரம்தான் இப்போதைய ‘மெகா’ டிரெண்டிங் செய்தி!

ADVERTISEMENT

ஓரியன்’ (Orion) என்னும் சீன நாய்!

கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் தனது அரங்கில் ஒரு ரோபோ நாயைக் காட்சிப்படுத்தி இருந்தது. அதற்கு ஓரியன்’ (Orion) எனப் பெயரிட்டு, அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நேஹா சிங், “நாங்கள் 350 கோடி ரூபாய் முதலீடு செய்து எங்கள் பல்கலைக்கழகத்தின் ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ மூலம் இதை உருவாக்கியுள்ளோம்” என்று செய்தி நிறுவனங்களிடம் ‘கெத்து’ காட்டினார்.

ADVERTISEMENT

ஆனால், விஷயம் அங்கதான் ட்விஸ்ட் ஆச்சு பாஸ்! சமூக வலைதளங்களில் இதைப் பார்த்த டெக் ஆர்வலர்கள், “இது சீனாவைச் சேர்ந்த Unitree நிறுவனம் தயாரித்த Go2 ரோபோ நாய்… ஆன்லைன்ல வெறும் 2.5 லட்சத்துக்கு விக்குது! இதைப்போய் 350 கோடி ரூபாய் புராஜெக்ட்னு ரீல் விடுறீங்களே”னு ஆதாரத்தோடு தட்டிப் கேட்டாங்க. அதுமட்டுமில்லாம, அங்கிருந்த ட்ரோன் கால்பந்து மைதானமும் (Drone Soccer Arena) கொரியாவைச் சேர்ந்தது என்பதும் அம்பலமானது.

ADVERTISEMENT

ஷாக்’ கொடுத்த மத்திய அரசு!

இந்த விவகாரம் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை (MeitY) காதுகளுக்குப் போனதுமே அதிகாரிகள் செம காண்டாகிட்டாங்க. “உலக நாடுகளோட தலைவர்கள், பெரிய பெரிய கம்பெனி சிஇஓ-க்கள் முன்னாடி இது இந்தியாவுக்குப் பெரிய தலைகுனிவு”னு முடிவு பண்ணி, உடனே கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தை மாநாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டாங்க.

  • பவர் கட்: அவங்க வெளியேறத் தாமதம் செஞ்சதால, அந்த அரங்குக்கான மின்சார இணைப்பையே அதிகாரிகள் கட் பண்ணிட்டாங்க பாஸ்!
  • ஐடி செயலாளர் எச்சரிக்கை: “இங்கே உண்மையான கண்டுபிடிப்புகளைக் காட்டத்தான் இடம் உண்டு… காப்பி அடிக்குறதுக்கும் (Plagiarism), தவறான தகவல் சொல்றதுக்கும் இடமில்லை”னு ஐடி செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ரொம்ப கறாரா சொல்லிட்டாரு.

முட்டுக்கொடுத்த பல்கலைக்கழகம்!

விஷயம் சீரியஸானதும் கலோடியாஸ் நிர்வாகம் ஒரு வழக்கம் போல ஒரு ‘எக்ஸ்கியூஸ்’ லெட்டரை தட்டி விட்டாங்க. “எங்க ஸ்டாப் கொஞ்சம் ஆர்வக்கோளாறுல அப்படி சொல்லிட்டாங்க… நாங்க இதைத் தயாரிக்கல, ஆனா இதுல ரிசர்ச் (Development) பண்றோம்னு தான் சொல்ல வந்தோம்”னு மழுப்பலா பதில் சொன்னாங்க. ஆனா, ஏற்கனவே டூர்தர்ஷன் வீடியோவுல அவங்க கொடுத்த ஸ்டேட்மென்ட் இப்போ அவங்களுக்கே எமனாகிடுச்சு!

4-வது நாள்: ஜாம்பவான்களின் அணிவகுப்பு!

இந்த ஒரு சர்ச்சையைத் தள்ளி வச்சிட்டுப் பார்த்தா, மாநாட்டின் 4-வது நாள் உண்மையிலேயே ஒரு ‘ஐ-ஓப்பனர்’ (Eye-opener).

  1. சாம் ஆல்ட்மேன் (OpenAI): “இந்தியா ஏஐ துறையில் ஒரு ‘ஃபுல்-ஸ்டாக்’ லீடராக மாறும்” என்று பாராட்டியதோடு, இந்தியாவில் தங்களது அலுவலகத்தை விரிவாக்கம் செய்யப்போவதாகவும் அறிவித்தார்.
  2. பில் கேட்ஸ்: ஏஐ தொழில்நுட்பம் எப்படி ஏழை நாடுகளின் சுகாதாரத்தையும், விவசாயத்தையும் மேம்படுத்தும் என்பது குறித்து விளக்கினார்.
  3. முகேஷ் அம்பானி: “டேட்டா என்பது புது எண்ணெய் என்றால், ஏஐ என்பது அந்த எண்ணெயைச் சுத்திகரிக்கும் ஆலை” என்று தனது பாணியில் பஞ்ச் பேசினார்.

இதை கவனிங்க பாஸ்:

  • அரசியல் மோதல்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இது ஒரு வெறும் பிஆர் (PR) நாடகம்… சீனத் தயாரிப்புகளைப் பாராட்டும் மாநாடாக இது மாறிவிட்டது” என்று அரசை விமர்சித்துள்ளார்.
  • யுபி அரசு விசாரணை: கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மீது உத்தரப்பிரதேச மாநில அரசு ‘தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்’ கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
  • நம்பகத்தன்மை முக்கியம்: ஏஐ போன்ற ஒரு முக்கியமான துறையில் பொய்களைச் சொல்லி சாதிக்க முடியாது என்பதற்கு இந்த விபரம் ஒரு பெரிய பாடம் பாஸ்!

“ஒரு சின்னப் பொய், ஒரு பெரிய மாநாட்டோட மதிப்பையே குறைச்சிடுச்சு”ங்கிறதுதான் வருத்தமான விஷயம். அதே சமயம், இதுபோன்ற போலி கண்டுபிடிப்புகளை உடனே கண்டுபிடித்து வெளியேற்றிய அரசின் நடவடிக்கை ஒரு நல்ல ஆரம்பம்.

இந்த ரோபோ நாய் விவகாரம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்? இது வெறும் ‘மிஸ்கம்யூனிகேஷன்’தானா? கமெண்ட்ல தட்டி விடுங்க பாஸ்!

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share