நடிகர் ஆர்யா வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

Published On:

| By Minnambalam Desk

Arya IT Raid

சென்னையில் நடிகர் ஆர்யா வீடு மற்றும் அவருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் 5 உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். Income Tax Officials Conduct Raids at Actor Arya’s Companies

சென்னையில் அண்ணா நகர், கொட்டிவாக்கம், கீழ்ப்பாக்கம் , வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் சென்னை அண்ணா நகர் Seashell restaurant உணவகங்களில் இந்த சோதனைகள் நடைபெறுகின்றன. மேலும் பிபிஓ நிறுவனம் ஒன்றிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல நடிகர் ஆர்யாவின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share