ADVERTISEMENT

‘ரஜினி என் குரு.. தலைவர்.. தனிக்கட்சி ஆரம்பிக்கும் போது சொல்றேன்’.. அண்ணாமலை பேட்டியால் பாஜக ‘ஷாக்’

Published On:

| By Mathi

Annamalai Press meet

‘தாம் தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது செய்தியாளர்களிடம் சொல்கிறேன்’ என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது அக்கட்சித் தலைவர்களிடையே அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று (செப்டம்பர் 23) செய்தியாளர்களை சந்தித்தார் அண்ணாமலை. அப்போது நடிகர் ரஜினிகாந்த், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்து பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு விரிவான விளக்கம் தந்தார் அண்ணாமலை. அத்துடன், ரஜினிகாந்த் என் குரு.. தலைவர் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

நடிகர் ரஜினிகாந்தை ஆன்மீகம், யோகா தொடர்பாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் பாஜக கூட்டணிக்கே அமமுக திரும்ப வரவேண்டும் என தினகரனிடம் வலியுறுத்தியதாகவும் கூறினார் அண்ணாமலை.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பு முடியும் போது, ‘நீங்க தனிக் கட்சி தொடங்கப் போவதாக சொல்லப்படுகிறதே’ என செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.

ADVERTISEMENT

இந்த கேள்விக்கு, தனிக்கட்சி தொடங்கவில்லை என மறுப்பு தெரிவிக்கவில்லை அண்ணாமலை. அதற்கு பதிலாக, ‘தனிக்கட்சி தொடங்கும் போது உங்களிடம் தெரிவிக்கிறேன்’ என்று மட்டும் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அண்ணாமலையின் இந்த பேட்டி தமிழக பாஜகவில் விவாதப் பொருளாகி இருக்கிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய பாஜக நிர்வாகிகள், “தனிக்கட்சி தொடங்குகிறீர்களா? என கேள்வி கேட்டால், நிச்சயமாக இல்லை.. பாஜகவில்தான் பயணிப்பேன் என்று அண்ணாமலை சொல்லி இருக்க வேண்டும்.. ஆனால் புதிர் போடும் வகையில், தனிக்கட்சி தொடங்கினால் சொல்லுகிறேன் என்ற பதிலை எப்படி எடுத்துக் கொள்வது? அதுவும் நடிகர் ரஜினிகாந்திடம் தனிக்கட்சி தொடர்பாக அண்ணாமலை ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படும் நிலையில் இப்படி ஒரு பதிலை சொன்னால் எப்படி புரிந்து கொள்வது?” என கேள்வி எழுப்புகின்றனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share