ADVERTISEMENT

சென்னை ஐஐடியில் (IIT Madras) படிக்க ஒரு ‘ஜாக்பாட்’ சான்ஸ்! 6000 ரூபாய் ஸ்டைபண்ட்… சாப்பாடும் ஃப்ரீ! மிஸ் பண்ணிடாதீங்க பாஸ்!

Published On:

| By Santhosh Raj Saravanan

iit madras summer fellowship 2026 stipend apply online details

“என்னப்பா… ஐஐடில படிக்கணும்ங்கிறது உங்க லைஃப் டைம் கனவா? ஆனா அங்க சீட் கிடைக்கிறது குதிரைக்கொம்புன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா? டோன்ட் வொர்ரி! ஐஐடி மெட்ராஸ் கேம்பஸ்க்குள்ள ஒரு ஸ்டூடண்ட்டா நுழைய உங்களுக்கு ஒரு ‘கோல்டன் டிக்கெட்’ காத்துட்டு இருக்கு.

“சென்னை ஐஐடி (IIT Madras) இப்போது ‘சம்மர் ஃபெலோஷிப் புரோகிராம் 2026’ (Summer Fellowship Programme 2026) திட்டத்தை அறிவித்துள்ளது. இரண்டு மாதங்கள் உலகத்தரம் வாய்ந்த பேராசிரியர்களுடன் இணைந்து ஆராய்ச்சி செய்யப்போகும் இந்த வாய்ப்பு, உங்க கேரியரை எங்கேயோ கொண்டு போகப்போகுது பாஸ்!

ADVERTISEMENT

சென்னை ஐஐடி சம்மர் ஃபெலோஷிப்: ஏ டூ இசட் விபரங்கள்! இந்தத் திட்டம் வெறும் படிப்பு மட்டும் கிடையாது, இது ஒரு செம எக்ஸ்பீரியன்ஸ். இதன் முக்கிய அம்சங்கள் இதோ:

  • கால அளவு: மே 18, 2026 முதல் ஜூலை 17, 2026 வரை (சுமார் 2 மாதங்கள்).
  • ஸ்டைபண்ட் (Stipend): சும்மா ஒர்க் பண்ண வேணாம் பாஸ், மாசம் 6,000 ரூபாய் வீதம் ரெண்டு மாசத்துக்கு மொத்தம் ரூ. 12,000 உங்க பாக்கெட்டுக்கு வந்து சேரும்.
  • யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்?: இளநிலை (UG) – பி.இ / பி.டெக் / பி.எஸ்சி (இன்ஜினியரிங், சயின்ஸ், ஹியூமானிட்டீஸ்) படிப்பில் 3-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அல்லது முதுநிலை (PG) முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அகாடமிக் ஸ்கோர்: நீங்கள் இதுவரை எடுத்த மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 60% அல்லது அதற்கு மேல் வைத்திருக்க வேண்டும்.

எந்தெந்த துறையினருக்கு வாய்ப்பு? ஏரோஸ்பேஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற இன்ஜினியரிங் துறைகள் மட்டுமின்றி, இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் படிக்கும் மாணவர்களுக்கும் இங்கே இடம் உண்டு.

ADVERTISEMENT

தேர்வு முறை எப்படி? நேரடியாக அப்ளை பண்ண வேண்டியதுதான். உங்களுடைய அகாடமிக் பெர்பார்மென்ஸ் மற்றும் நீங்கள் சமர்ப்பிக்கும் ‘ஸ்டேட்மெண்ட் ஆஃப் பர்பஸ்’ (SOP) அடிப்படையில் ஐஐடி பேராசிரியர்கள் உங்களை ஷார்ட்லிஸ்ட் செய்வார்கள்.

  • நேரத்தை வீணாக்காதீங்க: விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 31, 2026. ஆனா கடைசி நாள் வரை வெயிட் பண்ணாதீங்க, இப்போவே உங்க காலேஜ்ல இருந்து ‘போனஃபைட் சர்டிபிகேட்’ (Bonafide Certificate) வாங்கி அப்ளை பண்ணிடுங்க.
  • SOP-ல கவனம்: நீங்க ஏன் இந்த புரோகிராம்ல சேரணும்னு கேப்பாங்க. அதை மட்டும் மொட்டையா எழுதாம, உங்களுக்கு அந்த சப்ஜெக்ட்ல இருக்குற ஆர்வத்தை சூப்பரா விவரிச்சு எழுதுங்க. அதுதான் உங்க ‘ஜாக்பாட்’ ரிசல்ட்டை தீர்மானிக்கும்.
  • சென்னைவாசிகளுக்கு வசதி: நீங்க சென்னையிலேயே இருந்தா இன்னும் ஈஸி. ஐஐடி கேம்பஸ்க்குள்ளேயே தங்குறதுக்கும், சாப்பிடுறதுக்கும் அவங்களே ஏற்பாடு செஞ்சு தருவாங்க (நிபந்தனைக்கு உட்பட்டு). அந்த லைப்ரரியும், கேம்பஸும் உங்க மைண்டையே மாத்திடும்!

எப்படி விண்ணப்பிப்பது? தகுதியுள்ள மாணவர்கள் சென்னை ஐஐடியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sfp.iitm.ac.in என்ற பக்கத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க எந்தக் கட்டணமும் (Fees) கிடையாது என்பது கூடுதல் ஸ்பெஷல்!

ADVERTISEMENT

முடிவாக… ஐஐடி மெட்ராஸ் போன்ற ஒரு டாப் இன்ஸ்டிடியூட்ல சம்மர் இன்டர்ன்ஷிப் பண்ணிருக்கீங்கன்னு உங்க ரெஸ்யூம்ல ஒரு வரி இருந்தா, நாளைக்கு நீங்க பெரிய கம்பெனிக்கு வேலைக்குப் போகும்போது அது உங்களுக்கு ஒரு ‘விசிட்டிங் கார்டு’ மாதிரி இருக்கும். மிஸ் பண்ணிடாதீங்க பாஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share