“எதிர்காலம் கணினி மயமாகிடுச்சு… பசங்க எல்லாம் ஸ்மார்ட் போன் நோண்டுறாங்க… நாமளும் அப்டேட் ஆகலன்னா எப்படி?” என்று யோசிக்கும் அரசு மற்றும் கிராமப்புறப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி. இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராஸ் (IIT Madras), உங்கள் வீட்டுக்கே வந்து (ஆன்லைனில்) பாடம் சொல்லிக்கொடுக்கப் போகிறது.
ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் (IITM Pravartak) மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘ஸ்வயம் பிளஸ்’ (SWAYAM Plus) இணைந்து, கிராமப்புறப் பள்ளி ஆசிரியர்களுக்காகப் பிரத்யேகமாக ‘AI for Educators’ என்ற இலவசப் பயிற்சியை அறிமுகப்படுத்தியுள்ளன.
யாருக்கு இந்தப் பயிற்சி? ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை (K-12) பாடம் எடுக்கும் கிராமப்புறப் பள்ளி ஆசிரியர்கள் இதில் சேரலாம். “எனக்கு கம்ப்யூட்டர்ல பெருசா எதுவும் தெரியாதே” என்று பயப்படத் தேவையில்லை. அடிப்படை ஆர்வம் இருந்தாலே போதும்.
என்ன சொல்லித் தருவாங்க? 40 மணி நேரம் கொண்ட இந்தப் பயிற்சியில், நவீன தொழில்நுட்பங்களை எப்படி வகுப்பறையில் பயன்படுத்துவது என்று கற்றுத் தரப்படும்:
- ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI): பாடக் குறிப்புகள் (Lesson Plan) எடுக்க, வினாத்தாள் தயாரிக்க ஏஐ டூல்களை எப்படிப் பயன்படுத்துவது?
- கேமிஃபிகேஷன் (Gamification): விளையாட்டுகள் மூலம் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது எப்படி?
- ஏஆர்/விஆர் (AR/VR): கடினமான அறிவியல் பாடங்களைக் கண் முன்னே கொண்டு வருவது போன்ற விர்ச்சுவல் ரியாலிட்டி முறைகள்.
- மாணவர்களை மதிப்பிடுவதற்கு (Assessment) ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.
கட்டணம் உண்டா? பயிற்சிக்குக் கட்டணம் எதுவும் கிடையாது; முற்றிலும் இலவசம்! அதுமட்டுமல்ல, பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் முதல் 500 கிராமப்புற ஆசிரியர்களுக்கு சான்றிதழுக்கான கட்டணமும் (Certification Fee) தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்குப் பயிற்சி இலவசம், ஆனால் சான்றிதழ் தேவைப்பட்டால் மட்டும் சிறிய கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
முக்கியத் தேதிகள்:
- விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜனவரி 31, 2026
- வகுப்புகள் தொடங்கும் நாள்: பிப்ரவரி 5, 2026
விண்ணப்பிப்பது எப்படி? விருப்பமுள்ள ஆசிரியர்கள் iitmpravartak.org.in/AI_Educators_K12_teachers என்ற இணையதளத்தில் சென்று உடனடியாகப் பதிவு செய்யலாம்.
நகர்ப்புற தனியார் பள்ளிகள்ல ஸ்மார்ட் கிளாஸ், டேப்லெட்னு கலக்குறாங்க. நம்ம கிராமத்து ஸ்கூல் பசங்க என்ன பாவம் பண்ணாங்க? ஆசிரியர்கள் நீங்க நினைச்சா மாற்றத்தைக் கொண்டு வரலாம். இந்த கோர்ஸ் முழுக்க ஆங்கிலத்தில் இருந்தாலும், கத்துக்கிற ஆர்வம் இருந்தா மொழி ஒரு தடையா இருக்காது. ஐஐடி முத்திரை குத்தின சர்டிபிகேட் உங்க கேரியருக்கும் ஒரு பெரிய கௌரவம். நாளைக்கே ‘எங்க ஸ்கூல் டீச்சருக்கு ஏஐ தெரியும்’னு உங்க மாணவர்கள் பெருமையா சொல்லுவாங்க. மிஸ் பண்ணாதீங்க!
