திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ’துக்ளக்’ எஸ். குருமூர்த்தி தமது கருத்தை தெரிவித்துள்ளார்.
குருமூர்த்தி தமது எக்ஸ் பக்கத்தில்,
- திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி தவிர்க்க முடியாதபடி விஜய்யின் தவெகவுடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சியில் இருந்து திமுக வெளியேற்றப்படும்.
- ஆனால் விஜய்யின் தவெக வெற்றி பெறாது; பாஜக-அதிமுகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்.
- டெல்லியில் மோடிக்கு எதிராக இருந்த மிகவும் நம்பகமான கூட்டாளியை (திமுக) ராகுல் காந்தி இழந்து விடுவார்.
- காங்கிரஸ் எதிரியாக மாறினால், ராகுலை ஆதரித்து நின்ற திமுகவின் நிலைப்பாடு முட்டாள்தனமானதாகி விடும்.
- டெல்லியில் காங்கிரஸுக்கு திமுக தேவை; தமிழ்நாட்டில் திமுகவுக்கு காங்கிரஸ் தேவை.
- காங்கிரஸும் திமுகவும் ஒருவருக்கு ஒருவர் எதிராக மாறுவது என்பது இரு கட்சிகளுக்குமே முட்டாள்தனமான முடிவாகிவிடும்.
- இப்படியான முடிவு, ஒரு நண்பரை இழப்பது என்பது மட்டுமல்ல.. இரண்டு கட்சிகளுமே கூடுதலாக ஒரு எதிரியை உருவாக்கிக் கொள்வதற்கும் சமம்” என கூறியுள்ளார்.
