தனுஷ் இயக்கிய ’இட்லி கடை’ படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
தனுஷ் இயக்கி நடித்த ’இட்லி கடை’ படம் ஆயுத பூஜை வெளியீடாக கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
எதார்த்தமான கதை களத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் இரண்டாவது முறையாக தனுஷ் உடன் இணைந்து நடித்திருந்தார் நித்யா மேனன்.
அருண் விஜய், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, சத்யராஜ் என பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்த படம் 70 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் ‘இட்லி கடை; இந்த மாத இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் ஓடிடி-யில் வெளியாகும் என்று பட குழு தெரிவித்தது.
இந்த சூழலில் வரும் அக்டோபர் 29ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளிலும் இட்லி கடை படத்தை கண்டு ரசிக்கலாம் என்று நெட்பிளிக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது
