தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லிக் கடை‘ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியுள்ளது.
பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 4ஆவது படமாக ‘இட்லி கடை’ வெளியானது. இது தனுஷ் நடித்த 52-ஆவது படமாகும்.
தனுஷ் – நித்யா மேனன் காம்போவில் கிராமத்து உணவகம் மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்திருந்தனர்.
ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் சுமார் 45 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக சினிமா வட்டாரம் கூறுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமம் குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
திரையரங்க வெளியீட்டிற்குப் பிந்தைய ஒளிபரப்பு உரிமையை, பெரும் போட்டிக்கு மத்தியில் நெட்ஃப்ளிக்ஸ் இப்படத்தை வாங்கியிருக்கிறது .
பொதுவாக, திரையரங்குகளில் படம் வெளியாகி நான்கு வார கால இடைவெளிக்குப் பின் ஓடிடியில் வெளியாகும் என்பதால், இந்த மாதம் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் ‘இட்லிக் கடை’யை நெட்ஃப்ளிக்ஸில் எதிர்பார்க்கலாம்.
திரையரங்குகளில் கிடைத்த வெற்றி, ஓடிடி தளத்திலும் தொடரும் எனப் படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.