ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று (அக்டோபர் 31) பிறப்பித்த உத்தரவில்,

ADVERTISEMENT

“கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் செயலாளராக இருந்த கண்ணன் மாநில மனித உரிமைகள் ஆணையம் செயலாளராகவும், 

கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக இருந்த அம்ரித், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராகவும், 

ADVERTISEMENT

தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பொது மேலாளராக இருந்த கவிதா, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய இணை மேலாண் இயக்குனராகவும்,

தமிழக பேரிடர் அபாயக் குறைப்பு முகமை இணை இயக்குநராக இருந்த முத்துக்குமரன், பேரிடர் மேலாண்மை முகமை இயக்குனராகவும்

ADVERTISEMENT
https://twitter.com/TNDIPRNEWS/status/1984173588187115591

தமிழக மாநில தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்த லீலா அலெக்ஸ், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலராகவும், 

ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயத்தின் ஆணையராக இருந்த மு.வீரப்பன், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராகவும்

தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ரேவதி, உயர் கல்வித் துறை துணை செயலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,  2023ஆம் ஆண்டு தேர்வு பட்டியலின்படி, தமிழகத்தை சேர்ந்த கவிதா, முத்துகுமரன், லீலா அலெக்ஸ், வீரப்பன், ரேவதி ஆகிய 5 பேரை ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share