தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ( ஜனவரி 14) தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள உத்தரவில்,
1. தொழில்நுட்ப கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஆணையர்/சுற்றுலா மேலாண்மை இயக்குனராகவும்,
2. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனராக இருந்த கிறிஸ்துராஜ் தமிழ்நாடு மாநில வாணிப கழக மேலாண்மை இயக்குனராகவும்,
3. தமிழ்நாடு வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் விசாகன், தொழில்நுட்பக் கல்வி இயக்குனராகவும்
4. சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் செயலாளர் உமா மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் செயலாளர் ஆகவும்,
5. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் செயலாளர் ரத்னா வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை கூடுதல் செயலாளர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
