ராமநாதபுரத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு வழங்கிய அனுமதியை மாநில சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழக சுற்றுச் சூழல் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், ONGC நிறுவனமானது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் குறித்து ஆய்வு செய்ய விண்ணப்பித்தது. இதற்கு மாநில சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சுற்றுச் சூழல் அனுமதியை நேரடியாக வழங்கியது. இந்த செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.

இதனையடுத்து ONGC நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனே திரும்பப் பெற மாநில சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே முதலமைச்சரின் திடமான கொள்கை என தெரிவித்துள்ளார்.