சென்னையின் ஆவடியில் செயல்படும் ஹெவி விகில்ஸ் ஃபேக்டரி (HVF) சார்பில் 2026–27 ஆண்டுக்கான அப்பிரண்டிஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 450 அப்பிரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பயிற்சி அப்பிரண்டிஷிப் (திருத்தம்) சட்டம் 1973 கீழ் ஒரு வருட காலத்திற்கு வழங்கப்படுகிறது.
எத்தனை காலியிடங்கள்?
இந்த ஆட்சேர்ப்பில் மூன்று முக்கிய பிரிவுகளில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:
- கிராஜுவேட் அப்பிரண்டிஸ் (இன்ஜினியரிங்) – 150
- டிப்ளமோ (டெக்னீஷியன்) அப்பிரண்டிஸ் – 50
- நான்-இன்ஜினியரிங் கிராஜுவேட் அப்பிரண்டிஸ் – 250
மொத்தம்: 450 பணியிடங்கள்
கல்வித் தகுதி என்ன?
விண்ணப்பிக்க:
- பி.இ / பி.டெக் (இன்ஜினியரிங்)
- அல்லது டிப்ளமோ (இன்ஜினியரிங்)
- அல்லது பி.ஏ / பி.எஸ்.சி / பி.காம் / பி.சி.ஏ / பி.பி.ஏ போன்ற பட்டப்படிப்பு
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2022, 2023, 2024, 2025 பாஸ்-அவுட் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் (Stipend)
- கிராஜுவேட் & நான்-இன்ஜினியரிங் – ₹18,000 / மாதம்
- டிப்ளமோ – ₹16,200 / மாதம்
முக்கிய தேதிகள்
- விண்ணப்ப தொடக்கம் – மார்ச் 16, 2026
- கடைசி தேதி – ஏப்ரல் 20, 2026
- ஷார்ட்லிஸ்ட் வெளியீடு – ஏப்ரல் 30, 2026
தேர்வு முறை
இந்த வேலைக்கு:
- எழுத்துத் தேர்வு இல்லை
- மார்க் அடிப்படையிலான ஷார்ட்லிஸ்டிங்
- சான்றிதழ் சரிபார்ப்பு
மூலம் தேர்வு செய்யப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கும் முறை:
- NATS (நேஷனல் அப்பிரண்டிஷிப் டிரெயினிங் ஸ்கீம்) போர்டல் மூலம் ஆன்லைன் பதிவு
- “Heavy Vehicles Factory” என தேடி அப்ளை செய்ய வேண்டும்
முக்கிய நிபந்தனைகள்
- ஏற்கனவே அப்பிரண்டிஷிப் செய்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது
- 1 வருட அனுபவம் உள்ளவர்களும் தகுதி இல்லை
- பயிற்சி முடிந்த பிறகு வேலை உறுதி இல்லை
யாருக்கு இந்த வாய்ப்பு?
இந்த வேலைவாய்ப்பு:
- ஃப்ரெஷர் இன்ஜினியரிங் கிராஜுவேட்கள்
- டிப்ளமோ முடித்தவர்கள்
- அரசு பாதுகாப்பு துறையில் அனுபவம் பெற விரும்புபவர்கள்
அவர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாகும். மொத்தத்தில், ஆவடியில் உள்ள ஹெவி விகில்ஸ் ஃபேக்டரி அப்பிரண்டிஸ் வேலைவாய்ப்பு, டிஃபென்ஸ் மான்யூஃபாக்சரிங் துறையில் அனுபவம் பெற விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு முக்கிய ஆரம்ப வாய்ப்பாக பார்க்கப்படுகிறது
