கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணனின் உடலைப் பார்த்து அவரது 9 மாத கர்ப்பிணி மனைவி கதறி துடித்து அழுதது நெஞ்சை பிளக்கச் செய்வதாக இருந்தது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம், எரியோடு அருகே உள்ளது ஒத்தப்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் என்ற இளைஞர் கரூரில் நடைபெற்ற விஜய் கூட்டத்துக்கு போய் நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாமரைக்கண்ணனின் உடல் ஒத்தப்பட்டி கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது கணவரின் உடலைப் பார்த்து அவரது 9 மாத கர்ப்பிணி மனைவி கதறி துடித்தது நெஞ்சை பிளக்கச் செய்வதாக இருந்தது.

திமுக எம்.எல்.ஏ. காந்திராஜன் நிதி உதவி
ஒத்தப்பட்டி தாமரைக்கண்ணன் குடும்பத்தினருக்கு வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் தமது சார்பில் ரூ25,000 நிவாரண நிதியையும் காந்திராஜன் எம்.எல்.ஏ. வழங்கினார்.