விஜய் பிரச்சார கூட்டத்தில் சிக்கி மனைவியை பறிகொடுத்த கணவர் கதறும் வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்குகிறது.
கரூரில் நேற்று மாலை நடந்த பெருந்துயரம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தூக்கத்தை தொலைத்துள்ளது.
இந்நிலையில் கூட்ட நெரிசலால் உயிரிழந்த தனது மனைவியை கணவர் ஒருவர் தட்டி எழுப்பும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், “எழுந்துக்க முடியுமா பாருடி. அப்பவே வேண்டாம்னு சொன்னனே. வேடிக்கை பார்க்க போறேன்னு போய்ட்டாலே ” என்று கதறி அழுகிறார்.
இதன்பிறகே அப்பெண் சம்பவ இடத்தில் இருந்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்.
இதுபோன்று பல வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.