இளநரை வருவதற்கான காரணங்கள், அதனை எப்படி சரிசெய்வது என்பது குறித்துப் பார்க்கலாம்.
இளம் வயதிலேயே முடி நரைப்பது என்பது தற்போது பலருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. முப்பது வயது வருவதற்கு முன்பே பலரும் நரைமுடி பிரச்சனைகளால் அவதியுறுகிறார்கள்.
இளநரையை சரிசெய்ய நம்மில் பலரும் டை எனப்படும் செயற்கை பூச்சுகள் முதல் இயற்கை வைத்தியங்கள் வரை பலவற்றையும் மேற்கொண்டிருப்போம். ஆனால், வரும் முன் காப்போம் என்பது போல சில விஷயங்களை பின்பற்றினால் இளநரையை தடுக்க முடியும்.
இளநரை வருவதற்கான காரணங்கள், அதனை தடுக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்துப் பார்ப்போம். மெலனின் எனும் நிறமி நமது முடிக்கு நிறத்தை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மெலனின் உற்பத்தி குறையும்போது முடி நரைத்துவிடுகிறது. பரம்பரை பிரச்சனை, மரபணு குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு (Nutritional deficiency), மன அழுத்தம், வாழ்க்கை முறை ஆகியவை இளநரை பிரச்சனைக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.
இளநரையை தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்
வைட்டமின் பி12 குறைபாடு இளம் வயதிலேயே முடி நரைப்பதற்கு காரணமாக அமைகிறது. இது முடிக்கு நிறமளிக்கும் மெலனின் உற்பத்தியை பாதிக்கிறது. இதன் காரணமாக முடி அதன் நிறத்தை இழக்கிறது. பால், தயிர், முட்டை மற்றும் இறைச்சி போன்றவற்ற வைட்டமின் பி12 (Vitamin B12)நிறைந்துள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வடன் மூலம் பி12 குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம்.
இரும்புச்சத்து மற்றும் தாமிரம்
இந்த குறைபாடு இளம் வயதிலேயே நரைத்த முடிகளை ஏற்படுத்துகிறது. பசலைக் கீரை (iron rich foods) உள்ளிட்ட கீரை வகைகள், முந்திரி, பாதாம் போன்ற உலர் பழங்கள், தானியங்களை சாப்பிடலாம். மெலனின் உற்பத்திக்கு தாமிரம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்
மன அழுத்தத்தை குறைப்பது பல்வேறு பிரச்சனைகளை தவிர்க்க உதவும். யோகா, தியானம் செய்வதன் மூலம் மனதை அமைதியாக (
Reducing stress) வைத்திருக்க முடியும். இதேபோல புகைப்பிடிப்பதன் மூலம் ரத்த நாளங்கள் சுருங்குகின்றன. இது முடியின் வேர்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை குறைப்பதால் அது நரைக்கக் காரணமாகிறது. ஆகவே, புகைப்பதை தவிர்க்க வேண்டும்.
தூக்கம், தண்ணீர் குடிக்க வேண்டும்
ஒருநாளைக்கு 7-8 மணி நேரம் வரை உறங்குவது முடி ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை அளிக்கிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாளைக்கு 2.5 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் (stay hydrated) குடிக்க வேண்டும்.
ரசாயனங்களை தவிர்க்க வேண்டும்
ரசாயனங்கள் அடங்கிய ஷாம்புகள், அம்மோனியா கொண்ட ஹேர் டை (avoided Chemicals) பயன்பாட்டை குறைக்க வேண்டும். முடிந்தவரை மென்மையான, சல்பேட் இல்லாத ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும். ஹேர் டிரையர், ஸ்ரெட்னர் பயன்படுத்துவது அதிமான வெப்பத்தை உண்டாக்கி முடியை சேதப்படுத்துகிறது. ஆகவே, இவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம்.
