ADVERTISEMENT

வீட்டிலேயே இயற்கையான பீட்ரூட் லிப்ஸ்டிக் (Beetroot lipstick) தயாரிக்கலாம்.. இப்படி செய்து பாருங்க…

Published On:

| By Santhosh Raj Saravanan

How to make natural beetroot lipstick at homemade

நம் வீட்டிலேயே இயற்கையான பீட்ரூட் லிப்ஸ்டிக் (Beetrrot Lipstick) தயாரிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

நாம் அழகாக இருக்க வேண்டும் என்பதிலும், வசீகரமாக இருக்க வேண்டும் என்பதிலும் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அதற்காக விலை உயர்ந்த க்ரீம்கள், பேஷ் வாஷ்கள், லிப்ஸ்டிக்குகள் பயன்படுத்துவார்கள். இதனால் பல்வேறு விதமான பக்கவிளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக உதடு வெடிப்பு, ஒவ்வாமை மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. ஆகவே, செயற்கையாக தயாரிக்கப்பட்ட லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்துவதற்கு பதிலாக பீட்ரூட் மூலம் நாமே வீட்டில் செய்த இயற்கையான லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

லிப்ஸ்டிக் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்: 1 பீட்ரூட், சிறிது தேங்காய் எண்ணெய், கொஞ்சம் பெட்ரோலியம் ஜெல்லி, 1 வைட்டமின் ஈ காப்ஸ்யூல் ஆகியவை நமக்கு இயற்கையான லிப்ஸ்டிக் தயாரிக்க தேவைப்படுகின்றன.

லிப்ஸ்டிக் தயாரிப்பது எப்படி?: லிப்ஸ்டிக் தயாரிக்க, முதலில் பீட்ரூட்டை கழுவி நறுக்க வேண்டும். இப்போது இந்த நறுக்கிய பீட்ரூட்டை அரைத்து பேஸ்ட் செய்ய வேண்டும். இந்த பேஸ்டை பிழிந்து சாறை எடுக்க வேண்டும். பிற்கு பீட்ரூட் சாற்றை சூடாக்கி, அதனுடன் தேங்காய் எண்ணெயை கலக்க வேண்டும். இவற்றுடன் வைட்டமின் ஈ காப்ஸ்யூல் மற்றும் பெட்ரோலியம் ஜெல்லியைச் சேர்க்க வேண்டும். இப்போது உங்களுக்கு இயற்கையான பீட்ரூட் லிப்ஸ்டிக் தயாராக உள்ளது.

ADVERTISEMENT

பீட்ரூட் லிப்ஸ்டிக் நன்மைகள்: உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாகவும், மென்மையாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க பீட்ரூட் லிப்ஸ்டிக் உதவுகிறது. உதடுகளின் கருமையைக் குறைக்கிறது, உதடுகளிலிருந்து இறந்த செல்களை நீக்குகிறது. உதடுகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்தை வழங்குகிறது.உதடுகளை அடிக்கடி ஈரப்பதமாக்க வேண்டிய அவசியமில்லை. பீட்ரூட் லிஸ்ப்டிக் மூலம் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. இது செயற்கையான லிஸ்ப்டிக் போல இல்லாமல் இயற்கையான நிறத்தை அளிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share