முடி உதிர்வை தடுத்து செழித்து வளர வைக்கும் கருவேப்பிலை (Curry leaf) ஹேர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, மாசுபாடு மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, முடி உதிர்தல் ஒரு இளைஞர்களிடையே பொதுவான பிரச்சனையாகிவிட்டது. பலர் இளம் வயதிலேயே முடி உதிர்ந்து வழுக்கையை எதிர்கொள்கின்றனர், இது தன்னம்பிக்கை இழப்புக்கு வழிவகுக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் கறிவேப்பிலை ஹேர் ஸ்பிரேவை பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வை தடுக்கலாம்.
கருவேப்பிலையில் (curry leaf) உள்ள நன்மைகள்:
கறிவேப்பிலை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரதச்சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் ஊட்டச்சத்துக்கள் (curry leaf benefits) உச்சந்தலையை சுத்தப்படுத்தி, செயலிழந்த முடியின் வேர்களுக்கு புத்துயிர் அளிக்கின்றன. வெந்தயம் மற்றும் சீரகம் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களுடன் சேரும்போது, அவற்றின் சக்தி அதிகரிக்கிறது.
கருவேப்பிலை ஹேர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி?:
கருவேப்பிலை ஹேர் ஸ்பிரேவை எளிய முறையில் தயாரிக்காலம். முதலில் 50 கிராம் புதிய கறிவேப்பிலைகளை நன்கு கழுவ வேண்டும். இதனுடன் ஒரு தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் 4-5 கிராம்பு சேர்த்து ஒரு கிண்ணத்தில் போட வேண்டும். வெந்தயமும் சீரகமும் முடியின் வேர்களை வலுப்படுத்துகின்றன, அதே சமயம் கிராம்பு உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை (improves blood circulation in scalp) மேம்படுத்துகிறது
கருமையாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்:
நாம் எடுத்து வைத்த பொருட்களை சிறிதளவு தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற விட வேண்டும். இரவு முழுவதும் ஊற வைப்பதால், அனைத்து பொருட்களின் சாறுகளும் தண்ணீரில் நன்கு கரைந்துவிடும். மறுநாள் காலையில், இந்தத் தண்ணீர் (Black water) பாதியாக வற்றும் வரை அல்லது அதன் நிறம் கருமையாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். கருமையான தண்ணீர் ஆறிய பிறகு, அதை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தலாம்.
எப்படி பயன்படுத்துவது?:
இந்த ஹேர் ஸ்பிரேவை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. தினமும் காலை உங்கள் தலையில் முடி மெலிந்து காணப்படும் அல்லது முடி உதிர்ந்துள்ள பகுதிகளில் இதை ஸ்பிரே செய்ய வேண்டும்.
ஸ்ப்ரே (how to use hair spray) செய்த பிறகு, 5-10 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த மசாஜ், ஸ்பிரே தண்ணீரை முடியின் வேர்கள் வரை ஆழமாக ஊடுருவச் செய்து, புதிய முடி வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க உதவுகிறது. 15 முதல் 20 நாட்கள் வரை தொடர்ந்து பயன்படுத்தினால், முடியில் நல்ல பலன்களைக் காணத் தொடங்குவீர்கள். சிறிய புதிய முடிகள் வளரத் தொடங்கும், மேலும் முடி உதிர்தலும் கணிசமாகக் குறையும். உடனே டிரைப் பண்ணிப் பாருங்க மக்களே..
