வீடு கட்ட 50 லட்சம் ரூபாய் கடன்.. மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா?

Published On:

| By Santhosh Raj Saravanan

how much EMI you have to pay per month for 50 lakh rupees home loan in bob

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ரெப்போ வட்டி விகிதத்தை 1.25 சதவீதம் குறைத்ததால் வீட்டுக்கடன் வட்டி விகிதங்களும் கணிசமாகக் குறைந்தன. இதன் விளைவாக, பேங்க் ஆஃப் பரோடா போன்ற பொதுத்துறை வங்கிகள் தற்போது 7.20 சதவீதத்தில் வீட்டுக்கடன் வழங்குகின்றன. இந்த சலுகையைப் பயன்படுத்தி 50 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் பெற ஒருவருக்கு எவ்வளவு மாத சம்பளம் தேவைப்படும், மேலும் மாதந்தோறும் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 1.25 சதவீதம் குறைத்ததன் காரணமாக வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் வெகுவாகக் குறைந்தன. இந்த வட்டி விகிதக் குறைப்பிற்குப் பிறகு நாட்டின் அனைத்து வங்கிகளும் தங்கள் வீட்டுக்கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. குறிப்பாக, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா, தற்போது 7.20 சதவீதத்தில் வீட்டுக்கடன் வழங்குகிறது. இந்த வங்கி வழங்கும் குறைந்தபட்ச வீட்டுக்கடன் வட்டி விகிதமான 7.20 சதவீதத்தைக் கணக்கிட்டால், 50 லட்சம் ரூபாய் கடன் பெற மாதச் சம்பளம் ரூ. 68,000 இருக்க வேண்டும். இது 30 வருட கடன் காலத்திற்குப் பொருந்தும்.

ADVERTISEMENT

நீங்கள் 25 வருட காலத்திற்கு கடன் பெற விரும்பினால், உங்கள் மாதச் சம்பளம் ரூ. 72,000 ஆக இருக்க வேண்டும். 20 வருட காலத்திற்கு கடன் பெற, மாதச் சம்பளம் ரூ. 79,000 ஆக இருக்க வேண்டும். இந்தக் கணக்கீட்டின்படி கடன் பெற, உங்களுக்கு வேறு எந்தக் கடனும் நிலுவையில் இருக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 30 வருட காலக்கட்டத்திற்கு, ரூ. 68,000 மாதச் சம்பளத்துடன் கடன் பெற்றால், உங்கள் மாத EMI சுமார் ரூ. 34,000 ஆக இருக்கும். 25 வருட காலக்கட்டத்திற்கு ரூ. 72,000 மாதச் சம்பளத்துடன் கடன் பெற்றால் மாத EMI சுமார் ரூ. 36,000 ஆக இருக்கும்.

20 வருட காலக்கட்டத்திற்கு ரூ. 79,000 மாதச் சம்பளத்துடன் கடன் பெற்றால் மாத EMI சுமார் ரூ/36,000 முதல் ரூ.39,500 வரை இருக்கும். எந்த வங்கியிலும் கடன் பெற உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருக்க வேண்டும். கிரெடிட் ஸ்கோர் சரியாக இல்லையென்றால் வங்கி கடன் தர மறுக்கலாம். கிரெடிட் ஸ்கோருடன், உங்களின் பழைய கடன் கணக்குகளும் சரிபார்க்கப்படும்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share