பிஎஃப் பணத்தை எப்போது எடுக்கலாம்? எவ்வளவு பணம் எடுக்கலாம்? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விதிமுறைகள்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் (EPFO) உங்கள் PF பணம் சேமிக்கப்படுகிறது. அவசர காலங்களில் அல்லது தேவைகளின் போது, இந்த PF பணத்தை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கும். உதாரணமாக, உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தேவைப்பட்டு, PF பணத்தை எடுக்க விண்ணப்பித்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
ஆனால் உங்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்தது என்றால், ஏன் ஒரு லட்சம் கேட்டதற்கு 60 ஆயிரம் தான் கிடைத்தது என்ற கேள்வி எழும். EPFO-வில் இருந்து எவ்வளவு பணத்தை எடுக்க முடியும் என்பதற்கு சில கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் உள்ளன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
EPFO-வில் இருந்து உங்கள் PF பணத்தை உங்கள் தேவைக்கேற்ப எடுக்கலாம். சில சமயங்களில், நோய், திருமணம் அல்லது வீடு வாங்குதல் போன்ற தேவைகளுக்கு 100% வரை பணத்தை எடுக்க முடியும். சில சமயங்களில் 75 சதவீதம் வரை மட்டுமே எடுக்க முடியும். ஆனால், ஓய்வு பெற்ற பிறகு, உங்கள் PF கணக்கில் உள்ள முழு பணத்தையும் எடுக்கலாம். சமீபத்தில் மாற்றப்பட்ட விதிகளின்படி, PF பணத்தை எடுப்பது எளிதாகியுள்ளது. நீங்கள் 12 வருடங்கள் பணிபுரிந்திருந்தால், உங்கள் PF கணக்கில் உள்ள மொத்த தொகையையும் எடுக்க முடியும்.
வீடு வாங்க அல்லது புதுப்பிக்க எவ்வளவு எடுக்கலாம்?
நீங்கள் ஒரு வீடு வாங்க திட்டமிட்டாலோ அல்லது உங்கள் வீட்டைப் புதுப்பிக்க விரும்பினாலோ, உங்கள் PF கணக்கில் உள்ள தொகையில் 90 சதவீதம் வரை எடுக்கலாம். உதாரணமாக, உங்கள் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் இருந்தால், வீடு வாங்குவதற்காக 90,000 ரூபாய் வரை எடுக்க முடியும்.
நோய் பாதிப்புக்கு எவ்வளவு எடுக்கலாம்?
உங்கள் குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போனால், சிகிச்சைக்காக உங்கள் PF கணக்கில் உள்ள மொத்த தொகையில் 100 சதவீதத்தை எடுக்கலாம். மேலும், உங்கள் குழந்தைகளின் அல்லது உடன்பிறப்புகளின் கல்வி அல்லது திருமணத்திற்காக, உங்கள் பங்களிப்பு மற்றும் வட்டித் தொகையில் 75 சதவீதம் வரை எடுக்கலாம்.
வேலை செய்யும் போது எவ்வளவு எடுக்கலாம்?
நீங்கள் தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் நிறுவனத்தில், 12 மாதங்கள் பணிபுரிந்திருந்தால், உங்கள் PF கணக்கில் உள்ள மொத்த தொகையில் 25 சதவீதத்தை கழித்துவிட்டு மீதமுள்ள பணத்தை எடுக்கலாம். உதாரணமாக, உங்கள் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் இருந்தால், 75,000 ரூபாய் வரை எடுக்க முடியும்.
வேலையை விட்ட பிறகு எவ்வளவு எடுக்கலாம்?
நீங்கள் வேலையை விட்டுவிட்டாலோ அல்லது வேலையை விட்டு நீக்கப்பட்டாலோ, உங்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லை என்றாலோ இரண்டு மாதங்களுக்குப் பிறகு உங்கள் PF கணக்கில் உள்ள முழு பணத்தையும் எடுக்கலாம். சில சமயங்களில், இதற்காக 12 மாதங்கள் என்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் ஓய்வு பெற்றிருந்தால், இந்த சூழ்நிலையில் உங்கள் PF கணக்கில் உள்ள முழு பணத்தையும் எடுக்கலாம். புதிய EPFO விதிகளின்படி, இப்போது 12 மாதங்கள் பணிபுரிந்த பிறகு (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு) 100 சதவீத தொகையை எடுப்பது சாத்தியமாகியுள்ளது. இதற்கு முன்பு இந்த விதிக்கு 5 முதல் 7 வருடங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.
