டிஜிட்டல் திண்ணை: களைகட்டும் பேச்சுவார்த்தை.. திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்?

Published On:

| By Mathi

வைஃபை ஆன் செய்ததும், “ஓடங்கள் கரையேறும்.. ஓரங்கம் முடிவாகும்.. ஒய்யார நடைபோடும்”ங்கிற வரிகளை படித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்..

என்னய்யா.. இன்னைக்கு ஆரம்பமே விசித்திரமா இருக்கே..

ADVERTISEMENT

அப்படியா தெரியுது.. அறிவாலயத்தை கடந்து வந்ததால ‘பேச்சுவார்த்தை’ அனல் பட்ட சூடா இருக்கும்யா..

அப்ப சரி.. அறிவாலயத்துல பேச்சுவார்த்தை எப்படி போகுதாம்?

ADVERTISEMENT

திமுக கூட்டணியில காங்கிரஸைத் தவிர மற்ற கட்சிகளோட சபரீசனும் அமைச்சர் எ.வ.வேலுவும்தான் ‘நம்பர்ஸை’ பேசிகிட்டு இருக்காங்க.. அவங்க பேசுனதுக்கு பிறகு ஒவ்வொரு கட்சியா அறிவாலயம் வந்து டிஆர் பாலு குழுவோட பேசுறாங்க..

இப்ப வரைக்கும் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, மமகவுக்கு 2, காங்கிரஸுக்கு 28-ங்கிறது பைனலாகி ஒப்பந்தம் போட்டு இருக்காங்க..

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியில நேத்து நைட்டுதான் 28+1-ன்னு ஒப்பந்தம் கையெழுத்தாச்சு. அதுக்கு முன்னாடி கடைசி நேரத்துல சில பல பரபரப்பு சம்பவங்கள் நடந்துச்சுய்யா..

என்னான்னு சொல்லுமய்யா..

சொல்றேன்.. காலையில இருந்து காங்கிரஸ் குழு வரும்னு திமுக வெயிட் பண்ணுச்சு.. சாயங்காலம்தான் கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா எல்லாம் வந்தாங்க.. ஏர்போர்ட்டுலேயே சோடங்கர், நிவேதித் ஆல்வா, ராஜேஷ்குமார், செல்வப்பெருந்தகை எல்லாம் 1 மணிநேரம் வெயிட் பண்ணினாங்க.. ஹை கமாண்ட் 30 சீட் கேட்க சொல்லி இருக்காங்க.. திமுக சைடுல இருந்து கன்பார்ம் ஆகலை. அதனால டெல்லியில இருந்து தகவல் வந்ததும் போலாம்னு வெயிட் பண்ணினாங்க..

1 மணிநேரத்துக்கு அப்புறமா அப்படியே ஜிஆர்டி கிராண்ட் ஹோட்டலில்ல போய் காபி சாப்பிட்டு கொஞ்ச நேரம் வெயிட் செஞ்சாங்க.. அப்ப “அறிவாலயத்துக்கு போலாம்.. சிஎம் வெயிட் பண்ணுவாரு”ன்னு செல்வப்பெருந்தகை சொல்ல, “இல்லை.. இல்லை.. டெல்லியில இருந்த எனக்கு தகவல் வரலை.. அதனால வெயிட் பண்ணுவோம்”னு திரும்பவும் கிரிஷ் சோடங்கர் சொன்னாரு..

இங்கிட்டு சிஎம் ஸ்டாலின் 28+1தான்னு உறுதியாக இருந்தாரு..

அந்த நேரத்துல சிதம்பரம், மல்லிகார்ஜூன கார்கேகிட்ட பேசி, 28 சீட்தான் பைனல்னு சிஎம் சொல்றாருன்னு தகவல் சொன்னாரு..

கார்கேவும் சிஎம் ஸ்டாலின்கிட்ட பேச, அவர்கிட்டேயும் 28 சீட்தான் பைனல்னு சொல்லிட்டாரு…

கார்கே, ராகுல் காந்தியை கூப்பிட்டு சிஎம் சொன்னதை அப்படியே சொன்னாரு.. அதுக்கு பிறகு கேசி வேணுகோபாலை கூப்பிட்ட ராகுல் காந்தி, “சரி.. 28+1 முடிச்சிட சொல்லிடுங்க.. கிளம்பி போக சொல்லுங்க”ன்னு சிக்னல் கொடுத்தாரு..

இந்த தகவலை கிரிஷ் சோடங்கர்கிட்ட வேணுகோபால் சொல்ல அதுக்குப் பிறகுதான் காங்கிரஸ் டீம் அறிவாலயத்துக்கு வந்தது.. சிஎம் ஸ்டாலினும் செல்வப்பெருந்தகையும் ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டு அறிவிச்சாங்கய்யா…

இவ்வளவு நடந்திருக்கா.. இப்ப ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு சீட் கிடைக்கும்னு சொல்லுங்க…

தேமுதிகவைப் பொறுத்தவரைக்கும் பிரேமலதாகிட்ட அதிமுகவுல இருந்து எஸ்பி வேலுமணி பேசிகிட்டு இருந்தாரு..திமுகவுல இருந்து எ.வ.வேலு பேசுனாரு..

எ.வ.வேலுகிட்ட பேச்சுவார்த்தையை தொடங்கும் போதே 18+1ன்னு பிரேமலதா ஆரம்பிச்சாங்க.. அப்புறமா விஜயகாந்துக்கு ராசியான நம்பர் 5 அதனால 14+1ன்னு கேட்டாங்க.. திமுக சைடுலயும் 6+1-ல் ஆரம்பிச்சு 8,9-ன்னு 10 வரைக்கும் போய்கிட்டு இருந்துச்சு..

அப்ப திமுக கூட்டணியில காங்கிரஸும் ரொம்பவே இழுத்துகிட்டு இருந்துச்சு.. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணிக்கு போயிடுமோன்னும் சூழ்நிலை இருந்துச்சு..

அதனால சிஎம் ஸ்டாலின் டக்குன்னு, தேமுதிகவுக்கு 10+1ன்னு பேசி முடிச்சுடுங்கன்னு எ.வ.வேலுகிட்ட சொன்னாரு.. இதை தேமுதிகவும் அக்செப்ட் பண்ணிட்டதால அறிவாலயத்துல வந்து சிஎம் ஸ்டாலினை பிரேமலதா, எல்கே சுதீஷ் எல்லாம் வந்து பார்த்தாங்க..

விசிகவைப் பொறுத்தவரைக்கும் நாம ஏற்கனவே சொல்லி இருக்கோம்.. 2001-ல் நாங்க வளர்ந்துகிட்டு இருக்கும் போதே தமிழ்நாட்டுக்கு 10, புதுச்சேரிக்கு 2-ன்னு கலைஞர் கொடுத்தாரு.. இப்ப விசிக வளர்ந்துருக்கு.. போன டைம் 6 சீட் வாங்கி சொந்த சின்னத்துல போட்டியிட்டு 4-ல் ஜெயிச்சிருக்கோம்.. அதனால இந்த டைம் தமிழ்நாட்டுக்கு 12 , புதுச்சேரிக்கு 2 சீட் கொடுங்கன்னு கேட்டிருக்காங்க.. திமுகவோ போன டைம் கொடுத்த 6-ல் ஆரம்பிச்சு பேசி இருக்காங்க.. விசிகவுக்கு அதிகபட்சமா தமிழ்நாட்டுல 8-ம் புதுச்சேரியில 2-ம் திமுக கொடுக்க வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க..

இதே மாதிரி இடதுசாரிகள் ஒவ்வொரு கட்சிக்கும் 12 சீட் கேட்டுப் பார்த்தாங்க.. திமுக சைடு அவ்வளவுக்கு வாய்ப்பே இல்லை.. தேமுதிக, மநீம எல்லாம் புதுசா வந்திருக்காங்க.. அதனால போன டைம் போட்டியிட்டதை விட குறைச்சுக்குங்கன்னு எல்லோர்கிட்டேயும் சொல்ற மாதிரி சொல்லி இருக்காங்க.. ரெண்டு லெப்ட் பார்ட்டீஸுக்கும் போன டைம் கொடுத்த மாதிரி தலா 6 சீட் கிடைக்கத்தான் அதிகமான வாய்ப்பிருக்குதாம்..

மதிமுகவும் 12 சீட் கேட்டாங்க.. தனிச்சின்னத்துல போட்டியிடனும்னு சொன்னாங்க.. திமுகவோ போன டைம் போட்டியிட்ட 6 வாங்கிக்கங்க.. உதயசூரியன் சின்னத்துலேயே நில்லுங்கன்னும் சொல்லி இருக்காங்க.. இதை மதிமுக எதிர்பாக்கலையாம்.. கட்சியில பேசிட்டு சொல்றோம்னு சொல்லியிருக்கு மதிமுக குழு.

திமுக கூட்டணிக்கு புதுவரவான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு 6 சீட் கேட்டிருக்காங்க.. திமுக தரப்புல அதிகபட்சமா 3 கொடுக்க வாய்ப்பிருக்கு..

இவங்க இல்லாம கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன், தவாக வேல்முருகன், முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ், ஆதித் தமிழர் பேரவை அதியமான், முத்தரையர் கட்சியான தமிழர் தேசிய கட்சி செல்வக்குமார்,
ஆம் ஆத்மி வசீகரன், மனித நேய ஜனநாயகக் கட்சி தமிமுன் அன்சாரி, எஸ்டிபிஐ முபாரக், கொங்குநாடு இளைஞர் பேரவை தனியரசு, புதிய திராவிட கழகம் ராஜ் கவுண்டர்.. இவங்களும் திமுக குழுவோட பேசிட்டு போயிருக்காங்க..

சரிய்யா.. திமுக கூட்டணியில யாருக்கு எத்தனை இடம் கொடுப்பாங்கன்னு உத்தேசமா சொல்லும்..

அப்படியா.. நான் கணக்கை சொல்றேன்.. அனேகமா இப்படித்தான் திமுக கூட்டணியில தொகுதி பங்கீடு முடிய அதிக சான்ஸ் இருக்கு..

சொந்த சின்னத்தில போட்டியிடும் கட்சிகள் இடங்கள்(60)

காங்கிரஸ் 28
தேமுதிக 10
விசிக 8 (புதுச்சேரியில 2)
சிபிஐ 6
சிபிஎம் 6
முஸ்லிம் லீக் 2

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சிகள் இடங்கள் (17)

மதிமுக 6
மநீம 3
கொமதேக 2
மமக 2
தவாக 1
ஆதித் தமிழர் பேரவை 1
எஸ்டிபிஐ 1
முக்குலத்தோர் புலிப்படை 1

திமுக நேரடியாக போட்டியிடக் கூடிய இடங்கள் 157 ஆக இருக்கும்..

அதாவது 174 இடத்துல திமுகவின் உதயசூரியன் சின்னம் போட்டியிடலாம்.. மிச்சம் இருக்கிற 60 இடத்துல கூட்டணி கட்சிகள் சொந்த சின்னத்துல போட்டியிடக் கூடும்..

திமுகவுடன் பேசிட்டு போயிருக்கக் கூடிய சிறிய கட்சிகளுக்கு ஒன்றிரண்டு இடங்கள் கொடுத்தாலும் இப்ப நாம சொல்லி இருக்கிற கணக்குலதான் தொகுதி பங்கீடு இருக்க அதிகமான வாய்ப்பு இருக்கிறதா சொல்றாங்க என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share