‎90 லட்சம் கோடி… ஹவுத்திகள் வைத்த டிமாண்ட்… ட்ரம்புக்கு வந்த அழுத்தம்!

Published On:

| By Minnambalam Desk

Houthis demand donald trump for gaza war ‎

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் முடிவடைந்து, ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. Houthis demand donald trump for gaza war

‎இந்த ஒரு வார காலத்திற்குள் இஸ்ரேலின் தெற்கு பகுதியை நோக்கி, ஏமனின் ஹவுத்தி போராளி குழு தாக்குதலை நடத்தினர்.

‎ஹவுத்தி குழு தாக்கிய பல்வேறு ஏவுகணைகளை நடு வானிலேயே இஸ்ரேலின் ராணுவம் இடைமறித்து அழித்து விட்டது.

‎இஸ்ரேலுக்கு எதிராக ஹவுத்திக்கள் நடத்திய இந்த தாக்குதல் காசாவை மையமாக வைத்தே நடந்தது.

‎கடந்த இரண்டரை வருடங்களாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் முழுவதுமாக அழித்து வருகிறது. இதற்கு ஹவுத்தி குழுக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது.

‎மேலும், கடந்த ஆறு மாதங்களாக இஸ்ரேல் காசாவுக்கு செல்ல இருக்கின்ற பல்வேறு உதவி பொருட்களை தடுத்து நிறுத்தி சிறிது சிறிதாக மட்டுமே அனுப்பியிருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் பசியால் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

‎இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் ஹவுத்திக்கள் கடந்த வாரம் இஸ்ரேலின் மீது தாக்குதலை நடத்தியது.

மேலும், இந்தப் போரை நிறுத்தாவிட்டால் ஏமன் கடற்கரையில் செல்லும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்களை தாக்க நேரிடும் என ஹவுத்திக்கள் கடுமையாக எச்சரித்தனர்.

‎ஏமன் கடல் வழியாக ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 25,000 கோடி மதிப்பிலான சரக்கு கப்பல்கள் பயணிக்கிறது. ‎மேலும், ஒரு வருடத்திற்கு சராசரியாக 90 லட்சம் கோடி வர்த்தகம் இந்த கடல் வழியாக நடக்கிறது.

‎கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ஹவுத்தி குழுக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது. ‎இதனால் அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, இஸ்ரேல் மற்றும் முக்கிய ஐரோப்பிய நாடுகளின் கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

‎இதனால் கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்த கடந்த சில மாதங்களாகவே அமெரிக்கா ஹவுத்திகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு வருகிறது.

‎இருப்பினும் ஹவுத்திகளின் முக்கியமான ஒரு நிபந்தனையாக காசா உடனான போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளனர். முதலில் இதற்கு சம்மதம் தெரிவிக்காத அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போது சில நிபந்தனைகளுடன் 60 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். Houthis demand donald trump for gaza war

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share