செயற்கையான டையை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையான வீட்டு வைத்தியம் (home remedy oil) மூலமாக முடியை கருப்பாக்கலாம்.
நம்மில் பெரும்பாலானோருக்கு 30 வயதுக்குப் பிறகு வெள்ளை முடிகள் வரத் தொடங்குகிறது. பலருக்கு இளநரையாக அதிகமான முடிகள் வெள்ளையாக மாறிவிடுகின்றன. வெள்ளை முடிகளை கருப்பாக்க நாம் பெரும்பாலும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட டைகளை பயன்படுத்துகிறோம். ஆனால், இதில் உள்ள ரசாயனங்கள் தலையில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அகற்றி ஒவ்வாமை, அரிப்பை ஏற்படுத்துகிறது. முடிகள் சேதமடைந்து அவை உதிர்வதற்கும் காரணமாக அமைகின்றன.
ஆனால், இயற்கையான முறையிலேயே முடியை கருப்பாக்க நம்மிடம் ஒரு வீட்டு வைத்தியம் உள்ளது. தேங்காய் எண்ணெய்யுடன் வீட்டில் உள்ள சில பொருட்களை சேர்ப்பதன் மூலமாக இதனை தயாரித்துவிட முடியும். இது முடியை வேரில் இருந்தே கருப்பாக்க உதவி புரிகிறது. அத்துடன், எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. முடிக்கு ஊட்டமளித்து அதன் வளர்ச்சியிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறது.
தேவையான பொருட்கள் (hair oil recipe materials):
- தேங்காய் எண்ணெய் (Coconut Oil)
- நல்லெண்ணெய் (Gingelly Oil)
- வெந்தயம் (Fenugreek)
- கறிவேப்பிலை (Curry Leaves)
- நெல்லிக்காய் பொடி (Gooseberry)
- நிஜெல்லா (கருப்பு சீரகம்) (Nigella)
- இரும்பு வாணலி
எப்படி செய்வது? (How to make natural hair oil):
முதலில் இரும்பு வாணலியை கேஸ் அடுப்பில் வைத்து அதன் மீது தேங்காய் எண்ணெய்யை ஊற்ற வேண்டும். அதற்குப் பிறகு சிறிதளவு நல்லெண்ணெய் மற்றும் வெந்தயத்தை சேர்க்க வேண்டும். இதன் மீது கறிவேப்பிலை, நிஜெல்லா விதைகள், நெல்லிக்காய் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் கருப்பாக மாறும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
இந்த நடைமுறை எண்ணெய்யை கருப்பு நிறமாக மாற்றிவிடும். எண்ணெய் ஆறியபிறகு அதனை வடிகட்டி பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இந்த எண்ணெய்யை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வருவது முடிக்கு நல்ல ஊட்டமளிக்கும்.
வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் எப்படி முடியை கருப்பாக்கும்? (hair oil benefits):
இந்த நடைமுறை இயற்கையாகவே நரைமுடியை கருமையாக்க உதவுகிறது. இரும்பு பாத்திரம் முடிக்கு அத்தியாவசிய ஊட்டமளித்து மெலனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. வேரில் இருந்து முடியை கருமையாக்குகிறது. கறிவேப்பிலை, நெல்லிக்காய் பொடியும் முடியை கருமையாக்கும் முக்கிய பொருட்களாகும். இவற்றின் மூலம் ரசாயனங்கள் பயன்படுத்தாமலேயே முடியை கருமையாக்கலாம்.
