கோடைக்காலத்தில் முடியை பாதுகாப்பது முக்கியம்.. சில வீட்டு வைத்தியங்கள் லிஸ்ட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

Home remedies to hair care during summer

கோடைக் காலத்தில் முடியை பராமரிக்க வீட்டில் (Hair Care) உள்ள பொருட்களை வைத்தே எளிய சில வழிமுறைகளை பின்பற்றலாம்.

வெயில் காலம் தற்போதே தொடங்கிவிட்டது. ஒரு சில இடங்களில் தற்போதே 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. அக்கினி நட்சத்திரம் எனப்படும் கடும் வெயில் நாட்களில் இன்னும் வெப்பம் அதிகமாகும். வெயிலில் முதன்மையாக அதிகம் பாதிக்கப்படுவது நமது சருமம்தான். அதற்கு அடுத்தபடியாக வெயிலில் நமது முடி பாதிக்கப்பட்டு ப்ரஷ் போல ஆகிவிடுவதும் உண்டு. ஆகவே, அதற்காக நாம் இப்போதில் இருந்து முடி பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். இதற்கு விலை உயர்ந்த சீரம்கள், ஷாம்புகள், எண்ணெய்கள் எல்லாம் தேவையில்லை. நமது சமையல் அறையில் உள்ள பொருட்களைக் கொண்டே கோடையில் முடியை பராமரிக்கலாம்.

ADVERTISEMENT

கறிவேப்பிலை + தேங்காய் எண்ணெய் மசாஜ்:

2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் ஒரு கைப்பிடிஇ கறிவேப்பிலை இலைகளை சேர்க்க வேண்டும். கறிவேப்பிலை மொறுமொறுப்பாகவும் மாறும் வரை கலக்க வேண்டும். எண்ணெய் குளிர்ந்ததும் சுமார் 10 நிமிடங்கள் அதை உங்கள் உச்சந்தலையில் மசாஜ் (Curry leaves + coconut oil massage) செய்ய வேண்டும். பிறகு குளித்தால் முடிக்கு நல்ல ஊட்டமாக இருக்கும். கறிவேப்பிலையில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.  அவை அடிப்படையில் உங்கள் முடிகளின் வேர்களுக்கு புரத ஊட்டம் அளிக்கிறது. 

வெங்காயச் சாறு:

ஒரு சின்ன வெங்காயத்தை அரைத்து அதன் சாற்றை ஒரு துணியில் வடிகட்ட வேண்டும். பிறகு பஞ்சை வைத்து  உங்கள் உச்சந்தலையில் தேய்க்க வேண்டும். வெங்காய வாசனை (Onion juice) உங்களுக்கு பிடிக்காவிட்டால் சிறிது கற்றாழை ஜெல்லை அதில் கலக்கலாம். தலைக்கு தேய்த்த பின்னர் 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, ஷாம்புவை பயன்படுத்தி தலையை அலசவும். வெங்காயச் சாறு அதன் அதிக சல்பர் உள்ளது. இது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

ADVERTISEMENT

கற்றாழை:

உங்கள் உச்சந்தலையில் அரிப்பு அல்லது வெப்பத்தால் சூடாக உணர்ந்தால், கற்றாழை (Aloe vera gel) உங்களுக்கு சிறந்தது. புதிய கற்றாழை ஜெல்லை எடுத்து உங்கள் உச்சந்தலையில் நேரடியாகப் பூச வேண்டும். வெப்பமான நாளில் இது அற்புதமாக இருக்கும். 30 நிமிடங்களுக்குப் பிறகு குளித்தால் அது உங்கள் முடியை உறுதியாக வைத்திருக்கும்.

வெந்தயம்:

இரண்டு தேக்கரண்டி விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் அவற்றை மென்மையான பேஸ்டாக (fenugreek paste) அரைக்க வேண்டும். அது மிகவும் கெட்டியாக உணர்ந்தால் கொஞ்சம் தயிர் அல்லது சிறிது தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.  இது முடி உதிர்தலை நிறுத்துவதோடு, கோடையில் ஏற்படும் எரிச்சலூட்டும் பொடுகையும் போக்குகிறது. வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் சிறப்பான ரிசல்ட் இருக்கும்.

ADVERTISEMENT
எலுமிச்சை + தயிர்:

எலுமிச்சை, தயிர் பேஸ்ட் (Lemon + yogurt paste) உங்கள் தலைமுடியை ஆழமாக சுத்தம் செய்கிறது. எலுமிச்சை பிசுபிசுப்பை அகற்றும், அதே நேரத்தில் தயிர் உங்கள் தலைமுடி ப்ரஷ் போல மாறாமல் ஈரப்பதமாக வைத்திருக்கும். இரண்டு தேக்கரண்டி தயிருடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து, தலையில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசலாம். முடி ஊட்டச்சத்துடன் இருப்பதோடு, வளர்ச்சியும் அதிகரிக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share