“இன்ஜினியரிங் முடிச்சோம்… ஆனா வேலை தேடி சென்னைக்கோ, பெங்களூருக்கோதான் மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு போகணுமா? நம்ம ஊர்ல, நம்ம வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிட்டுகிட்டு ஒரு ஐடி வேலை பார்க்க முடியாதா?” – இதுதான் இன்று கடலூர், விழுப்புரம், புதுச்சேரி போன்ற பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பட்டதாரி இளைஞர்களின் மனக்குமுறல். அந்தக் குறையைப் போக்கும் வகையில், கடலூரில் இயங்கும் ஒரு முன்னணி நிறுவனம் இளைஞர்களுக்கு ‘ஜாக்பாட்’ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹெச்.இ.பி.எல் (HEPL – Hema’s Enterprises Pvt Ltd) நிறுவனம், தற்போது மாபெரும் இன்டர்ன்ஷிப் (Internship) வாய்ப்பை அறிவித்துள்ளது. இது ஏதோ சாதாரண நிறுவனம் அல்ல; புகழ்பெற்ற கவின்கேர் (CavinKare) குழுமத்தின் ஒரு பகுதியாகச் செயல்படும் நிறுவனம் இது. இங்கு மென்பொருள் மேம்பாடு (Software Development) மற்றும் ஐடி கன்சல்டிங் சேவைகள் வழங்கப்படுகின்றன.
எந்தெந்தத் துறைகளில் வாய்ப்பு? வேலை தேடும் இளைஞர்களின் திறனை வளர்க்கும் நோக்கில், கீழ்க்கண்ட 5 அதிநவீன தொழில்நுட்பப் பிரிவுகளில் சுமார் 100 இடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளனர். பொதுவாக இதுபோன்ற துறைகளுக்குச் சென்னையில் கூட வாய்ப்புகள் கிடைப்பது அரிது.
- செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI): எதிர்காலமே இதுதான்.
- இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT): ஸ்மார்ட் டிவைஸ் தொழில்நுட்பம்.
- ரோபோட்டிக்ஸ் (Robotics): இயந்திரவியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு.
- சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் (Software Development): கோடிங் எழுதத் தெரிந்தவர்களுக்கு.
- ட்ரோன் டெக்னாலஜி (Drone Technology): வளர்ந்து வரும் புதிய துறை.
யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்? கல்லூரி மாணவர்கள், படித்து முடித்த ஃப்ரெஷர்ஸ் (Freshers) மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். “எனக்கு முன் அனுபவம் இல்லையே” என்று தயங்க வேண்டாம். இது ஒரு பயிற்சித் திட்டம் என்பதால் ஆர்வம் மட்டுமே முக்கியத் தகுதி. உதவித்தொகை (Stipend) குறித்த விவரங்கள் நேர்காணலின் போது தெரிவிக்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
நேர்காணல் எப்போது? (முக்கிய குறிப்பு) இந்த அரிய வாய்ப்பைப் பெற விரும்புபவர்கள், கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெறும் நேரடித் தேர்வில் (Walk-in Interview) கலந்து கொள்ள வேண்டும்.
- தேதிகள்: வரும் பிப்ரவரி 3 (செவ்வாய்) மற்றும் பிப்ரவரி 4 (புதன்), 2026.
- நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மட்டுமே. (குறிப்பிட்ட நேரத்திற்குள் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்).
இடம்: Hema’s Enterprises Pvt Ltd (HEPL), எண். 59, எஸ்-12, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் (SIDCO Industrial Estate), செம்மண்டலம், கடலூர்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால், jai.s@hepl.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 7010993430 என்ற அலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், பாண்டிச்சேரி பசங்களுக்கு இது உண்மையிலேயே ஒரு கோல்டன் சான்ஸ் பாஸ். ரோபோட்டிக்ஸ், ட்ரோன் டெக்னாலஜி எல்லாம் கத்துக்க வெளியூர் போய் லட்சக்கணக்குல செலவு பண்ணுவாங்க. ஆனா, உள்ளூர்ல ஒரு பெரிய கார்ப்பரேட் கம்பெனி அதை இலவசமா அல்லது பயிற்சியாகத் தரும்போது மிஸ் பண்ணிடாதீங்க. இன்டர்வியூ நேரம் காலை 10 மணியில் இருந்து 2 மணி வரைதான்னு தெளிவா போட்டிருக்காங்க. அதனால 9.30 மணிக்கெல்லாம் ஸ்பாட்ல இருக்குற மாதிரி பிளான் பண்ணிக்கோங்க. ரெஸ்யூம், கல்விச் சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மறக்காம எடுத்துட்டுப் போங்க. ஆல் தி பெஸ்ட்!
