ADVERTISEMENT

WEATHER: கனமழை வெளுக்கும்.. இன்று எந்த 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’?

Published On:

| By Mathi

Yellow Alert Rain

காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 19) கனமழை கொட்டும் என ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று செப்டம்பர் 19-ந் தேதி முதல் செப்டம்பர் 24-ந் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி- காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

சென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் இன்று இரவு இடி- மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share