வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை கொட்டிவருவதால் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகரும். நம்பர் 22-ந் தேதி, தென்கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையக் கூடும்.
வங்க கடல் குறைந்த காற்றழுத்த் தாழ்வு நிலையால்
- கன்னியாகுமரி
- திருநெல்வேலி
- தூத்துக்குடி
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- தென்காசி
- தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்யக் கூடும்.
விழுப்புரம் மற்றும் கடலூரில் கனமழை கொட்டி வருவதால் 2 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
