தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 10-ந் தேதி வரை ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மழைக்கான வாய்ப்புள்ளது; திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் செப்டம்பர் 10-ந் தேதி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.