WEATHER: தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Published On:

| By Mathi

Tamil Nadu Weather

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று ஆகஸ்ட் 7-ந் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது (Weather Report).

தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

  • தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்
  • தென்னிந்திய பகுதிகளின் மேல்
  • ராயலசீமா, அதனை ஒட்டிய பகுதிகளின் மேல்

என 3 வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ADVERTISEMENT

இதனால் இன்று ஆகஸ்ட் 7-ந் தேதி வியாழக்கிழமை, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர்,ராணிபேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆக.8-ல் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

ADVERTISEMENT

நாளை ஆகஸ்ட் 8-ந் தேதி வெள்ளிக்கிழமையன்று கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்

நாளை மறுநாள் ஆகஸ்ட் 9-ந் தேதி சனிக்கிழமையன்று விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share