வங்க கடல் மற்றும் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகி உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று ஜூலை 25-ந் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்று ஜூலை 25-ந் தேதி முதல் முதல் ஜூலை 30-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

சென்னை மாநகரைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும்; நகரின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும்.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்; இது மேற்கு வங்கம்- வடக்கு ஒடிஷா கடற்கரையை நோக்கி நகரும்.