ஆயுத பூஜைக்காக ரயில்களில் சொந்த ஊர்களுக்கு செல்லக் கூடிய பயணிகள் இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. பணியிடங்களில் நீண்ட நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் வெளியூரில் பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்கு வந்து செல்வர். இதனால் பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அலை மோதும்.

இந்த நெரிசலில் சிக்கித் தவிக்காமல் இருக்க முன்பதிவுகள் செய்யபடுவது வழக்கம். இந்த ஆண்டு ஆயுத பூஜை விடுமுறையில் செல்வோர் ரயில்களில் இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐஆர்டிசி இணைய தளம் மற்றும் ரயில்வே முன்பதிவு மையங்களில் இன்று முதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.