ADVERTISEMENT

மோடி சொன்ன தீபாவளி பரிசு வந்துருச்சு.. GST வரிகள் 5%, 18%, 40% ஆக மாற்றம்- ஜிஎஸ்டி கவுன்சில் அதிரடி முடிவு!

Published On:

| By Mathi

GST Council

நாட்டில் நடைமுறையில் 5%, 12%, 18%, 28% என ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் இருந்து வருகின்றன. இந்த ஜிஎஸ்டி வரி அமைப்பானது 5%, 18% மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கான 40% என்கிற புதிய வரி கட்டமைப்புக்கு மாற்றுவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கு தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இதனையடுத்து டெல்லியில் இன்று (செப்டம்பர் 3) ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி வரி கட்டமைப்பு மாற்றம்

ADVERTISEMENT
  • தற்போதைய ஜிஎஸ்டி வரி கட்டமைப்பில் 12%, 28% ஆகியவை நீக்கப்படுகின்றன
  • இனி நாட்டில் 3 வரிவிகிதங்கள் மட்டுமே நடைமுறையில் இருக்கும்
  • 5%, 18% மற்றும் ஆடம்பர பொருட்களுக்கான 40% ஜிஎஸ்டி வரிவிகிதம் மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
  • செப்டம்பர் 22-ந் தேதி முதல் இந்த புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வரும்.
  • ஏற்கனவே 18%, 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பெரும்பாலான பொருட்களுக்கு இனி 5% மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
  • அதேபோல ஜிஎஸ்டி வரியில் இருந்து ஏராளமான பொருட்களுக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • உயிர் காக்கும் மருந்துகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி கிடையாது
  • பால், பனீர், பீஸா, பிரட் போன்ற உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டுள்ளது.
  • பேண்டேஜ் போன்ற மருத்துவ உபகரணங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
  • எழுதுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை
  • வீட்டு உபயோகப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 28%-ல் இருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • தேங்காய் எண்ணெய், சோப்பு பார்கள், ஷாம்பு, பிரஷ் , பற்பசை, மேஜைப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள் மற்றும் பிற வீட்டுப் பொருட்கள் அனைத்துக்கும் ஜிஎஸ்டி வரி 5% ஆகக் குறைப்பு
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share