டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள்கள் தனியார் பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Group 4 question paper in private bus
தமிழ்நாடு முழுவதும் நாளை ஜூலை 12ஆம் தேதி 4000 பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
இதற்காக தேர்தல்கள் தயாராகி வரும் நிலையில் தேர்வாணையம் சார்பில் அனைத்து மையங்களுக்கும் வினாத்தாள்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்திலிருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது.
வழக்கமாக வினாத்தாள்கள் கண்டெய்னர் லாரிகளில் சீலிடப்பட்டு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படும்.
ஆனால் மதுரை ஆட்சியர் அலுவலக கருவூலத்திலிருந்து தனியார் பேருந்து மூலம் வினாத்தாள் எடுத்துச் செல்லப்பட்டது. அதிலும் பேருந்து கதவில் ஏ4 சீட் மூலம் சீல் வைத்து அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
லட்சக்கணக்கானோர் எழுதும் தேர்வு வினாத்தாளை இப்படி போதிய பாதுகாப்பு இல்லாமல் அனுப்பியது விமர்சனங்களுக்கு உள்ளானது.
வினாத்தாள் கசிய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில் டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் கசியவில்லை. அதனால் தேர்வர்கள் அச்சப்பட தேவையில்லை. தனியார் பேருந்தில் வினாத்தாள் எடுத்துச் செல்லப்பட்டது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். Group 4 question paper in private bus