IND vs ENG : பும்ரா தவிர இந்தியா அணியின் பந்துவீச்சு தாக்குதலில் எந்தவிதமான வேறுபாடும் இல்லாததே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என முன்னாள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கிரெக் சேப்பல் தெரிவித்தார். greg chappel attak indian bowling for 1st test
இங்கிலாந்துக்கு சுற்றப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி கடந்த 20ஆம் தேதி ஹெடிங்லியில் தொடங்கிய முதல் டெஸ்ட்டில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அந்த தோல்விக்கு இந்திய அணி வீரர்கள் சுமார் 10க்கும் மேற்பட்ட கேட்ச்களை தவறவிட்டதே காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கிரெக் சேப்பல் முற்றிலும் வேறுபட்ட விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அவர், “முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பீல்டிங்கை விட, பந்துவீச்சு தாக்குதலில் பன்முகத்தன்மை இல்லாததுதான் மிகவும் கவலையளிக்கும் காரணியாக இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹெடிங்லியில், பும்ரா மொத்தம் 43.4 ஓவர்கள் 5 விக்கெட்டுகளை எடுத்து 140 ரன்களை வழங்கினார். ஆனால் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களான ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மொத்தமாக 92 ஓவர்கள் வீசி 9 விக்கெட்டுகளை எடுத்து 482 வழங்கினார்.
அணியில் இருந்த ஒரே சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 1 விக்கெட் மட்டுமே எடுத்து 172 ரன்கள் வழங்கினார்.
இதுகுறித்து அவர், “ஹெடிங்லியில் ஃபீல்டிங் எவ்வளவு ஏமாற்றமளித்தாலும், இந்தியா டெஸ்டில் தோல்வியடைந்ததற்கு அது முக்கிய காரணம் அல்ல. இந்தியாவின் பெரும்பாலான பிரச்சினைகள் தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்டவை தான்.
எனக்கு மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்திய அணியின் பந்துவீச்சு தாக்குதலில் பன்முகத்தன்மை இல்லாதது. ஜஸ்பிரித் பும்ராவைத் தவிர, மற்ற இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஒரே மாதிரி எந்த வித்தியாசமும் இன்றி பந்து வீசினர். அவர்கள் மூவரும் வலது கை மற்றும் மிதமான வேகத்தில் பந்துவீசக் கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 2 ஆம் தேதி பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் இந்தியா மீண்டும் எழுச்சி பெற, பும்ரா இல்லாத நிலையில் இடது கை பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஷேன் வார்னுக்குப் பிறகு சிறந்த மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவையும் அணியில் சேர்த்து பிளேயிங் லெவனில் காண விரும்புகிறேன்.
வெற்றி பெற வேண்டுமானால், இந்திய அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில்துணிச்சலான முடிவுகளை எடுக்க தைரியம் கொண்டிருக்க வேண்டும்” என சேப்பல் தெரிவித்தார்.