மேற்கு வங்கம் மற்றும் லடாக் ஆளுநர்கள் ராஜினாமா செய்த நிலையில் தமிழ்நாடு, தெலுங்கானா, இமாச்சல பிரதேசம் , டெல்லி, பீகார் ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

ஆளுநர்கள் மாற்றம்- நியமனம் விவரம்:
- மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். அவருக்குப் பதிலாக, தற்போது தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.
- இமாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்த சிவபிரதாப் சுக்லா, தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தெலுங்கானா ஆளுநராக இருந்த ஜிஷ்ணு தேவ் வர்மா, மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நந்த் கிஷோர் யாதவ் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னைன், பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- லடாக் துணை நிலை ஆளுநராக இருந்த கவிந்தர் குப்தா, இமாச்சலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- டெல்லி துணை நிலை ஆளுநராக இருந்த வினய் குமார் சக்சேனா, லடாக் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தரஞ்சித் சிங் சாந்து டெல்லியின் புதிய துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
