தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் இன்று (ஏப்ரல் 19) குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. Governor Ravi meets Dhankhar
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், மசோதாக்கள் மீது குடியரசு தலைவர், ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடுவை உச்சநீதிமன்றம் நிர்ணயித்தது.
இந்தநிலையில், ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தசூழலில், ஆளுநர் ரவி ஏப்ரல் 17-ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி சென்றார்.
ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், டெல்லியில் இன்று ஆளுநர் ரவி ஜெகதீப் தன்கரை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஜெகதீப் தன்கர், ஆளுநர் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. Governor Ravi meets Dhankhar