ADVERTISEMENT

அரசு இதழியல் நிறுவனத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Kavi

சென்னை அரசு இதழியல் நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 25) தொடங்கி வைத்தார்.

இதழியல் துறை​யில் ஆர்​வம் உள்ள இளைஞர்​களை ஊக்​குவிக்​கும் நோக்கத்தில் சென்னையில் இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கப்படும் என்றும் இதில் முதுநிலை பட்டயப் படிப்பு (PG Diploma in Journalism) 2025-2026 கல்வியாண்டு முதல் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

ADVERTISEMENT

இதற்​காக, ரூ.7.75 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

இக்​கல்வி நிறு​வனத்​தின் நிர்​வாகக் குழு தலை​வ​ராக ‘தி இந்​து’ குழு​ம இயக்​குநர் என்​.ரவி, தலைமை இயக்​குந​ராக மூத்த பத்திரி​கையாளர் ஏ.எஸ்​. பன்​னீர் செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் கோட்டூர்புரத்தில் நிறுவப்பட்டுள்ள தமிழக அரசின் இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 25) தொடங்கி வைத்தார். இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிறுவனத்தில் அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பு அளிக்கும் வண்ணம் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share