8 லட்சம் அரசு ஊழியர்கள்… அரசின் முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

Government employees festive advance

அரசு ஊழியர்களின் பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி தமிழக அரசு இன்று (மே 6) அரசாணை வெளியிட்டுள்ளது. Government employees festive advance

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கான முக்கிய  அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் தேவை அடிப்படையில் திருமண முன் பணம் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. Government employees festive advance

இந்தநிலையில் இன்று (மே 6) பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், ஏற்கனவே இதுவரை வழங்கப்பட்டு வரும் பத்தாயிரம் ரூபாய் பண்டிகை கால முன்பணம் தற்போது இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 இலட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அனைத்து நிரந்தர அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள்,அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோர் பயன் பெறலாம்.

ஆனால் இப்படி பண்டிகை கால முன் பணத்தை உயர்த்துவதன் மூலம் தங்களை அரசு கடனாளியாக்குகிறது என்று அரசு ஊழியர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Government employees festive advance

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share