தனியார்மயமாகிறதா அரசு பேருந்துகள்?: அமைச்சர் சிவசங்கர்

Published On:

| By Kavi


தமிழக அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

“சென்னை மாநகரப் பேருந்துகளை படிப்படியாகத் தனியார்மயமாக்கத் தமிழக அரசு தீர்மானித்திருப்பதாகவும், அதற்காக உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன” என்று கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இதற்குத் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆகஸ்ட் 8ஆம் தேதி விளக்கமளித்துள்ளார். “சென்னை மாநகர பேருந்துகளைத் தனியாரிடம் வழங்குவதா? அதைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கிராம மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நிறைவான போக்குவரத்து சேவை ஆற்றி வருகிறது.

சமூக நலன், கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்பிற்காக அனைத்து மகளிர், மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் உட்படப் பலருக்குக் கட்டணமில்லா பேருந்து சலுகையினை வழங்கி வருகிறது.

ADVERTISEMENT

மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில், பேருந்துகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருவது என்பது தனியார் மயமாக்கல் அல்ல என்பதையும், அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் அமைச்சர் சிவசங்கர்.
பிரியா
அரசு பேருந்துகளில் பார்சல் சேவை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share