கூகுளின் ‘ஜெமினி’யில் இனி ஐஐடி பயிற்சி… அதுவும் இலவசம்! கோச்சிங் சென்டர்களுக்கு ‘செக்’ வைக்கும் அதிரடி அறிவிப்பு!

Published On:

| By Santhosh Raj Saravanan

google gemini free jee mock test india physicswallah careers360

“ஐஐடி, என்ஐடி-ல சீட் வாங்கணும்னா லட்சக்கணக்குல ஃபீஸ் கட்டி கோச்சிங் போகணுமே… ஏழை மாணவர்களுக்கு அது எட்டாக் கனவுதானா?” என்ற கவலையைப் போக்கும் வகையில், கூகுள் நிறுவனம் ஒரு மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்ஃபோனே உங்களை ஐஐடி-க்கு தயார்படுத்தும் வாத்தியாராக மாறப்போகிறது!

கூகுள் தனது செயற்கை நுண்ணறிவுத் தளமான ‘ஜெமினி’ (Gemini AI) மூலம், மாணவர்களுக்கு இலவசமாக ஜெஇஇ (JEE) மாதிரித் தேர்வுகளை நடத்தும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

யார் கூட கூட்டணி? “சும்மா ஏஐ (AI) வெச்சு ஏமாத்துவாங்களா?” என்று சந்தேகப்பட வேண்டாம். இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களான ‘பிசிக்ஸ் வாலா’ (Physics Wallah) மற்றும் ‘கேரியர்ஸ் 360’ (Careers360) ஆகியவற்றுடன் இணைந்து கூகுள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இதனால் கேள்விகளின் தரம், உண்மையான தேர்வு போலவே இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் என்ன?

ADVERTISEMENT
  1. முழு மாதிரித் தேர்வு: உண்மையான ஜெஇஇ மெயின்ஸ் தேர்வு எப்படி இருக்குமோ, அதே போன்ற முழு நீளத் தேர்வுகள் (Full-length Mock Tests) இதில் உள்ளன.
  2. உடனடி ரிசல்ட்: தேர்வு முடிந்த அடுத்த வினாடியே, நீங்கள் வாங்கிய மதிப்பெண், எந்தப் பாடத்தில் வீக், எதில் ஸ்ட்ராங் என்ற முழு ஜாதகத்தையும் ஜெமினி கொடுத்துவிடும்.
  3. ஸ்டெப்-பை-ஸ்டெப் விளக்கம்: தவறான பதில்களுக்குச் சரியான விடை என்ன, அதை எப்படி எளிதாகத் தீர்ப்பது (Step-by-step solution) என்பதையும் வாத்தியார் போலப் பொறுமையாக விளக்கும்.
  4. முற்றிலும் இலவசம்: இதற்கு எந்தவித சந்தாக் கட்டணமும் (Subscription Fee) கிடையாது.

எப்படிப் பயன்படுத்துவது? மிகவும் சிம்பிள்! உங்கள் போன் அல்லது கம்ப்யூட்டரில் கூகுள் ஜெமினி (gemini.google.com) தளத்திற்குச் செல்லுங்கள்.

  • அங்குள்ள சேட் பாக்ஸில், “I want to take a JEE Main mock test” என்று டைப் செய்தாலே போதும். ஜெமினி உடனே உங்களுக்கான தேர்வுத் தாளைக் கொண்டு வந்து நிறுத்தும்.

லட்சக்கணக்கில் செலவு செய்து கோச்சிங் சென்டர் போறவங்க ஒரு பக்கம் இருக்கட்டும். கிராமப்புறத்துல இருந்துகிட்டு, புத்தகம் மட்டும் வெச்சுப் படிக்கிற மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். தினமும் ஒரு மாதிரித் தேர்வை ஜெமினியில எழுதிப் பழகுங்க. ‘பிசிக்ஸ் வாலா’ கன்டென்ட் என்பதால் நம்பகத்தன்மை அதிகம். நீங்க தப்பு பண்ற இடத்தைச் சுட்டிக்காட்டி, அதை எப்படித் திருத்திக்கலாம்னு சொல்ற இந்த டெக்னாலஜியைப் பயன்படுத்திக்கோங்க. வருங்கால இன்ஜினியர்கள் கையில் இனி உலகம்!”

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share